புதிய டொயோட்டா எட்டியோஸ் ,லிவோ கார்கள் விரைவில்

0

விற்பனையில் உள்ள டொயோட்டா எட்டியோஸ் , லிவா கார்களின் தோற்ற அமைப்பில் மட்டுமே கூடுதலான மாற்றங்களை பெற்றுள்ள புதிய எட்டியோஸ் மற்றும் லிவோ கார்கள் பிரேசில் நாட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2016-Toyota-Etios-Liva-Facelift

Google News

வருகின்ற பண்டிகை காலத்தை ஓட்டி புதிய டொயோட்டா எட்டியோஸ் மற்றும் எட்டியோஸ் லிவோ கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

முன்பக்கத்தில் ஸ்போர்ட்டிவ் வகை பம்பர் ,அலாய் வீல் பின்பக்க பம்பரை பெற்றுள்ளது. ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை.  உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டு புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , புதிய இருக்கைகள் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , க்ரூஸ் கன்ட்ரோல் ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்டு இருக்கை , மூன்று பாயின்ட் இருக்கை பட்டை போன்ற ஆப்ஷன்களை பெற்றிருக்கும்.

2016-Toyota-Etios-Facelift-Dashboard

விற்பனையில் உள்ள மாடல்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் நாடுமுழுவதும் உள்ள அனைத்து டீலர்களும் ரூ.15,000 வரை விலை சலுகை வழங்க தொடங்கியுள்ளதால் ஸ்டாக் மாடல்களை காலி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. எனவே தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக புதிய எட்டியோஸ் , லிவா கார்கள் வரவாய்ப்புகள் உள்ளது.

தோற்ற மாற்றத்தை தவிர எஞ்சின் ஆப்ஷன் ஆற்றல் பெரிதாக மாற்றம் இருக்காது எட்டியோஸ் லிவோ காரில் 80PS ஆற்றல் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 69PS ஆற்றல் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் பெற்றுள்ளது. எட்டியோஸ் காரில் 90PS ஆற்றல் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும்  69PS ஆற்றல் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் பெற்றுள்ளது.

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து லிவோ , எட்டியோஸ் கார்களும் அடுத்ததாக புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.