புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் காரில் முகப்பு மற்றும் பின்புற பம்பர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் டைமன்ட் கிரில் அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட முகப்பு விளக்கு , பகல் நேர எல்இடி விளக்குகள். எல்இடி முகப்பு விளக்குகள் ஆப்ஷனல் ( A45 AMG மாடலில் நிரந்தரம் ) பின்புறத்தில் உள்ள புகைபோக்கி அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பென்ஸ் A கிளாஸ் உட்புறத்தில் 8 இஞ்ச் தொடுதிரை சிஸ்டம் பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் மிரர்லிங் மென்பொருள் ஸ்மார்ட்மொபைல்களை தொடர்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. உட்புற உபகரணங்களில் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
என்ஜின்
மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் காரில் A160 மாடலில் 99எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
A180 மாடலில் 108எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் பூளூஎஃபிசன்சி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
A220 மற்றும் A250 பெட்ரோல் வரிசை மாடல்களில் கூடுதலாக 7எச்பி வரை ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் A கிளாஸ் டீசல் மாடல்களில் CDI பேட்ஜை நீக்கிவிட்டு d என மாற்றியுள்ளது. A180d மாடலில் சிறப்பான மைலேஜ் மற்றும் ஆற்றலை வழங்கும். A220d மாடல் 175எச்பி ஆற்றலை தரும்.
ஏ கிளாஸ் மாடலின் பெர்ஃபாமன்ஸ் வேரியண்டான 2016 மெர்சிடிஸ் பென்ஸ் A45 AMG மாடலின் ஆற்றல் 21எச்பி வரை அதிகரிக்கப்பட்டு 376எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர்.
A கிளாஸ் காரில் 3 விதமான டிரைவ் ஆப்ஷனை கொண்ட டிரைவ் செலக்ட் அமைப்பு உள்ளது. இதன் மூலம் ஈக்கோ , கம்ஃபோர்ட் , மற்றும் ஸ்போர்ட் உள்ளது.
வரும் ஜூலை 3ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் செப்டம்பர் முதல் ஐரோப்பாவில் டெலிவரி செய்ய உள்ளனர் . இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் மிக விரைவில் வரவுள்ளது.
2016 மெர்சிடிஸ் பென்ஸ் A45 AMG |
|
2016 மெர்சிடிஸ் பென்ஸ் A45 AMG
2016 Mercedes-Benz A Class Facelift Unveiled
|