2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி எப்பொழுது

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் பிரேசிலில் சோதனை ஓட்டத்தில் உள்ள படங்கள் வெளியாகியுள்ளது. 2017 இக்கோஸ்போர்ட் மாடல் தோற்றம் மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்களை பெற்றிருக்கலாம்.

2017-ford_ecosport-rendered

முகப்பில் தற்பொழுது உள்ள கிரிலை விட மிக அகலமான கிரில் முகப்பு விளக்குள் மற்றும் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் போன்றவை மேம்படுத்தப்பட்டிருக்கலாம். பக்கவாட்டில் புதிய வடிவ அலாய் வீல் தற்பொழுது உள்ள மாடலின் புரஃபைல் தோற்றமே தொடரலாம்.

மேலும் பின்பக்க தோற்றத்தில் எல்இடி டெயில் விளக்குகள் , மேம்படுத்தப்பட்ட பம்பர் போன்றவற்றை பெற்றிருக்கும்.

உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட சென்டர்ல் கன்சோலை கொண்ட டேஸ்போர்டு மற்றும் சிங்க் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவற்றினை பெற்றிருக்கும்.

2013யில் விற்பனைக்கு வந்த ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்திய சந்தையில் அமோகமான வரவேற்பினை பெற்றது. ஆனால் கடந்த சில மாதங்களாக கடுமையான சவால்கள் நிறைந்த காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் டியூவி300 மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

எனவே தன் போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் ஈக்கோஸ்போர்ட் மாடலை புதுப்பிக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. என்ஜின்களில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்புகள் இல்லை. இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் புதிய 2017 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வரவுள்ளது.

2017 இகோஸ்போர்ட் படங்கள்

படங்கள் மற்றும் தகவல் உதவி ; revistaautoesporte.globo.com மற்றும் autossegredos.com.br