2017 டொயோட்டா வயோஸ் கார் அறிமுகம்

0

தாய்லாந்தில் மேம்படுத்தப்பட்ட 2017 டொயோட்டா வயோஸ் செடான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்ப்பட்டுள்ளது. இந்திய சந்தையிலும் வயோஸ் மாடல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

2017 toyota vios

Google News

புதிய கேம்ரி மாடலின் அடிப்படையிலான வடிவ தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள வயோஸ் காரில் புராஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க கிரில் மற்றும் பம்பருடன் ,புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்குகளை பெற்று விளங்குகின்றது.

இன்டிரியரில் இருவண்ண கலைவயிலான டேஸ்போர்டு , நேர்த்தியான லெதர் இருக்கைகள் , புதிய 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்போன் ஆதரவு மற்றும் புதிய இன்ஸ்டுருமென்ட் கிளஸ்ட்டர் ,ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் போன்ற பல்வேறு வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது.

2017 Toyota Vios facelift interior

தாய்லாந்தில் 108 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின் இடம் பெற்றிருந்தாலும் , இந்திய சந்தைக்கு வருகின்ற பொழுது எட்டியோஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் கரோல்லா அல்டிஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள 1.4 லிட்டர் டி-4டி டீசல் என்ஜினும் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க – டொயோட்டா வயொஸ் கார் விபரம்

இந்திய சந்தையில் புதிய டொயோட்டா வயோஸ் கார் இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களிலோ விற்பனைக்கு வரலாம்.

2017 டொயோட்டா வயோஸ் படங்கள்