மேம்படுத்தப்பட்ட புதிய 2017 நிசான் டெரானோ எஸ்யூவி கார் மார்ச் 27ந் தேதி அன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெரானோ கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் மாற்றங்களை பெற்றதாக வரவுள்ளது.

நிசான் டெரானோ எஸ்யுவி

  • ரெனோ டஸ்ட்டர் காரின் அடிப்படையில் உருவான மாடலே நிசான் டெரானோ மாடலாகும்.
  • தோற்ற அமைப்பில் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை பெற்றதாக வரவுள்ளது.
  • என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இடம்பெற வாய்ப்பில்லை.

டெரானோ எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவை 84 bhp ஆற்றலுடன் மற்றும் 200 Nm டார்க்கினை வழங்குகின்றது. மேலும் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் 108 bhp மற்றும் 243 Nm டார்க் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஏஎம்டி கியர்பாக்சுடனும் இடம்பெற்றுள்ளது.

அதிகபட்சமாக 103 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் 145 Nm டார்க்கினை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ்இடம்பெற்றுள்ளது.

வரவுள்ள புதிய டெரானோ எஸ்யுவி மாடலில் முன்பக்க வி மோஷன் கிரில் போன்றவற்றில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் ஹெட்லேம்புடன் கூடிய பகல் நேரத்தில் ஒளிரும் வகையிலான எல்இடி விளக்குகளுடன் வரக்கூடும். மேலும் இன்டிரியர் அமைப்பில் கூடுதலான வசதிகளை பெற்றதாக வரவுள்ளது.

வருகின்ற மார்ச் 27ந் தேதி  நிசான் டெரானோ எஸ்யூவி மாடலின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வருகின்றது.

மேலும் படிக்கலாமே..! டெரானோ கார் மற்றும் நிசான் கார் செய்திகள் பற்றி படிக்க..!