மீண்டும் 2017 பஜாஜ் பல்ஸர் 200 NS பைக் இந்திய சந்தையில் ரூ.98,374 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் மற்றும் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு எஞ்சினை பெற்றுள்ளது.
பஜாஜ் பல்ஸர் 200 NS
மிகவும் நேர்த்தியான புதிய வண்ணங்களுடன் வந்துள்ள 2017 லேசர் எட்ஜ்டு டிசைன் ஸ்டிக்கரிங் கொண்ட பல்ஸர் 200 என்எஸ் மாடலில் தற்பொழுது வெள்ளை , சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.
பல்ஸர் NS 200 பைக்கில் 23.1 hp பவரை வெளிப்படுத்தும் 199.5சிசி டிரிப்ள்-ஸ்பார்க் பிஎஸ்4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.3 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மாடலாகும்.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் அமைந்திருக்கின்ற பல்ஸர் 200 NS பைக்கின் முன்புற டயரில் 280மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 230மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் பெரும்பாலான டீலர்களுக்கு 200 என்எஸ் மாடல் வந்து விட்டுள்ளதால் உடனடியாக டெலிவரியும் தொடங்கப்பட்டுள்ளதாக ஒரு சில டீலர்கள் தெரிவிக்கின்றனர்.
[sociallocker id=16548]
2017 பஜாஜ் பல்ஸர் 200 NS பைக் விலை ரூபாய் 98,374 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு விலை)
[/sociallocker]