2017 மாருதி ஸ்விஃப்ட் பிரவுச்சர் கசிந்தது – ஜப்பான்

அடுத்த ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் பிரவுச்சர் விபரங்கள் ஜப்பான் சுஸூகி ஸ்விஃப்ட் படங்கள் வெளியாகியுள்ளது. புதிய சுஸூகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் மற்றும் ஸ்போர்ட்டிவ் மாடலை பெற்றுள்ளது.

ஜப்பானில் விரைவில் விற்பனைக்கு செல்ல உள்ள புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரானது விற்பனையில் உள்ள பலேனோ காரின் வடிவ தாத்பரியங்கள் மற்றும் உடற்கூறு அமைப்பினை கொண்டே வடிவமைக்கப்பட்ட மாடலாக விளங்கும்.

2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் பார்வைக்கு வரவுள்ள புதிய ஸ்விஃப்ட் கார் மிக இலகுவான எடை கொண்டதாக சிறப்பான மைலேஜ் மற்றும் நவீன வசதிகளாக புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என மேலும் பல வசதிகளை கொண்டதாக இருக்கும்.

ஜப்பானிய மாடலில் Hybrid RS, RSt, RS, Hybrid ML, XL மற்றும் XG  போன்ற வேரியன்ட்கள் இடம்பெற்று 1.2லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜினை பெற்றுள்ளது. இந்தியாவில் மாருதி சுஸூகி 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மாடலுடன் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டதாக விளங்கும்.  மேலும் ஸ்விஃப்ட் ஆர்எஸ் ஸ்போர்டிவ் மாடல் பலேனோ ஆர்எஸ் காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெற்ற மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2017 Maruti Suzuki Swift RS model brochure

2017 ஆம் ஆண்டின் மத்தியில் புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

2017 மாருதி ஸ்விஃப்ட் படங்கள்

image : instagram