2017 முதல் ஹூண்டாய் கார்கள் விலை 1 லட்சம் வரை உயர்வு

வருகின்ற ஜனவரி 2017 முதல் ஹூண்டாய் கார்கள் விலை அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை விலை உயர்வினை சந்திக்கின்றது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி காரின் விலையும் உயர்த்தப்பட உள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் தென்கொரியா நாட்டின் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இயான் , கிராண்ட் ஐ10 , ஐ10 , எலைட் ஐ20 , ஐ20 ஏக்டிவ் , க்ரீட்டா ,எக்ஸ்சென்ட் , வெர்னா , எலன்ட்ரா , டூஸான் மற்றும் சான்டா ஃபீ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு வந்த புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி உள்பட அனைத்து மாடல்களின் விலையும் அதிகபட்சமாக ரூ.1,00,000 லட்சம் விலை உயர்வினை சந்திக்க காரணம் அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனம் , டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் விலை உயர்வினை தவிர்க்க இயலவில்லை என ஹூண்டாய் இந்தியா மூத்த துனை தலைவர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அனைத்து முன்னனி கார் தயாரிப்பாளர்களும் விலை உயர்வினை அறிவித்து வரவுள்ள நிலையில் மேலும் பல நிறுவனங்கள் விலை உயர்வினை விரைவில் அறிவிக்க உள்ளன. டொயொட்டா , ரெனோ, நிசான் , டாடா , டட்சன் போன்ற நிறுவனங்கள் விலை உயர்வினை அறிவித்துள்ளன எனபது குறிப்பிடதக்கதாகும்.

Recommended For You