2017 யமஹா R15 V3 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியானது

கடந்த சில வருடங்களாக பெரிதாக மாற்றங்கள் இல்லாமல் இருந்துவரும் யமஹா R15 பைக்கின் மேம்படுத்தப்பட்ட V3 மாடலின் சோதனை ஓட்ட பங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. யமஹா ஆர்15 இந்தேனேசியாவில் சோதனை ஓட்டதில் உள்ள படங்கள் கிடைத்துள்ளது.

வரவுள்ள 2017 ஆம்ஆண்டின் மத்தியில் சர்வதேச அளவில் பல நாடுகளில் விற்பனைக்கு செல்ல உள்ள ஆர்15 பைக்கின் வெர்ஷன் 3 யில் பல்வேறு விதமான தோற்ற மாற்றங்கள் மற்றும் நவீன டிஜிட்டல் டிஸ்பிளே இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவற்றை பெற்றதாக இருக்கும்.

வெளியிடப்பட்டுள்ள ஆர்15 பைக்கின்  முன் தோற்றத்தில் பல மாற்றங்களுடன் யூஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் டிஜிட்டல் டிஸ்பிளே இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மேலும் பின்தோற்ற படங்கள் வாயிலாக புதிய டிசைன் வடிவத்தை கொண்டுள்ள ஃபூட் பெக் , ஆர்1 பைக்கில் உள்ளதை போன்ற நவீன டிசைன் கொண்ட எல்இடி டெயில் விளக்குகள் பெற்றுள்ளது. மேலும் தற்பொழுது வெளியாகியுள்ள படங்களின் வாயிலாக எல்இடி ஹெட்லேம்ப் வசதியை எம்-ஸ்லாஷ் பைக்கில் உள்ளதை போன்றே பெற்றுள்ளது.

 

என்ஜின் மாற்றங்கள் பற்றி எவ்விதமான தெளிவான தகவல்கள் இல்லையென்றாலும் ஊகங்களின் அடிப்படையில் 20 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்பட்ட செயல்திறனை கொண்ட என்ஜினாகவும் மிக சிறப்பான திராட்டிள் ரெஸ்பான்ஸ் கிடைக்கும் வகையிலான VVA (Variable Valve Actuation) நுட்பத்தினை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட மாடலாக 2017 யமஹா R15 V3 இந்த ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம்.

யமஹா R15 V3 ஸ்பை படங்கள்

image source: Iwanbanaran