Auto News

2017 முதல் ஹூண்டாய் கார்களில் ஹைபிரிட் ஆப்ஷன்

Spread the love

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் கார் நிறுவனம் அடுத்த வருடம் முதல் ஹைபிரிட் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மைல்ட் ஹைபிரிட் மற்றும் ஐயோனிக் போன்ற முழு ஹைபிரிட் கார்களும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

சமீபத்தில்  இந்தியா ஹூண்டாய் தலைமை செயல் அதிகாரி YK Koo அளித்துள்ள பேட்டியில் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் சாஃப்ட் ஹைபிரிட் ஆப்ஷனை நடுத்தர பிரிவு கார்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பூளூடிரைவ் என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனத்தால் அழைக்கபடும் மைல்ட் ஹைபிரிட் பெட்ரோல் ஹைபிரிட் அல்லது டீசல் ஹைபிரிட் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் சோனாடா ஹைபிரிட் கார் காட்சிப்படுத்தியது. ஹூண்டாய் ஐயோனிக் ஹைபிரிட் கார் மாடலும் அடுத்த சில வருடங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஃபேம் (Faster Adoption and Manufacturing of Electric vehicles – FAME) எனப்படும் திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மாருதி சுஸூகி காரில் SHVS  மற்றும் மஹிந்திரா எஸ்யூவி காரில் இன்டெலி ஹைபிரிட் போன்ற மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. எலைட் ஐ20 மற்றும் க்ரெட்டா போன்ற கார்களில் ஹைபிரிட் சிஸ்டம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ோனிக்


Spread the love
Share
Published by
MR.Durai
Tags: Hyundai