விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விலை ரூ. 4.58 லட்சத்தில் தொடங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகப்படியான வசிகளை பெற்ற மாடலாக புதிய கிராண்ட் ஐ10 கார் விளங்கும்.

கிராண்ட் ஐ10 விலை

கிராண்ட் ஐ10 விலை

இதுகுறித்து வெளியாகியுள்ள விபரங்களில் புதிய கிராண்ட் ஐ10 மாடலின் விலை ரூ.4.58 லட்சம் முதல் ரூ. 7.32 லட்சம் வரையில் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளியான தகவலான முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சின்குக்கு மாற்றாக 1.2லிட்டர் டீசல் எஞ்சினே இடம்பெற்றிருக்கும் என தெரிகின்றது.

பாரீஸ் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வந்த மாடலை போன்றே அமைப்பினை பெற்றதாக வரவுள்ள இந்த மாடலில்முன் மற்றும் பின்புற பம்பர்கள் பதுப்பிக்கப்பட்டு , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் ,  புதிய பனிவிளக்கு , புதுப்பிக்கப்பட்ட 15 அங்குல அலாய் வீல் , போன்றவற்றை பெற்றிருக்கும்.

இன்டிரியரில் முழு ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ,  புதிய 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு விதமான நவீன வசதிகளுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விலை பட்டியல் மற்றும் வசதிகள்

வருகின்ற பிப்ரவரி மாத தொடக்க வாரங்களில் இந்த மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தகவல் உதவி – டீம்பிஹெச்பி