ரஷ்யா சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2017 ஹூண்டாய் வெர்னா கார் (ஹூண்டாய் சோலரீஸ்) தோற்ற மாற்றங்களுடன் பல்வேறு வசதிகளுடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட வெர்னா மாடலை போன்ற அமைந்துள்ளது. இந்தியாவில் புதிய வெர்னா கார் வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்.
ஹூண்டாய் வெர்னா கார்
ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் சோலரீஸ் கார் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலை போன்ற தோற்ற அமைப்புடன் கூடுதலாக சில வசதிகளை பெற்று விளங்குகின்றது.
முன்புறத்தில் க்ரோம் பூச்சூ கொண்ட பம்பர் பட்டைகள் , பனி விளக்கு அறை போன்றவற்றுடன் பக்கவாட்டில் சிறிய அளவிலான புராஃபைல் மாற்றங்களுடன் , புதிய வடிவத்தினை பெற்றுள்ள அலாய் சக்கரங்கள் , பின்புறத்தில் புதிய பம்பர் ,டெயில் விளக்கில் சிறிய மாறுபாடுகளை கொண்டுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவு போன்றவற்றுடன் பல்வேறு வசதிகளை பெற்று ஏபிஎஸ் இஎஸ்பி , முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் போன்வற்றை பெற்றுள்ளது.
ரஷ்யாவில் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே சோலரீஸ் கிடைக்கின்றது. இந்தியாவில் வெர்னா விற்பனைக்கு வரும்பொழுது தற்பொழுது உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலே தொடரலாம்.