2017 ஹூண்டாய் வெர்னா படங்கள் வெளியானது

0

2017 ஹூண்டாய் வெர்னா செடான் காரின் படங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மாறுபட்ட தோற்ற அமைப்பில் சிறப்பாக ஹூண்டாய் வெர்னா அமைந்துள்ளது.

2017-Hyundai-Verna-front

Google News

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பீஜிங் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலுக்கு இனையான தோற்றத்தினை பெற்று விளங்குகின்றது. ஹூண்டாய் எலன்ட்ரா காருக்கு இணையான அகலம் கொண்டுள்ள முன்பக்க கிரிலுடன் விளங்குகின்றது.  ஃபுளூடியக் 2.0 ஸ்கல்ப்ச்சரை அடிப்படையாக கொண்டது.

முந்தைய மாடலை  விட நீளம் , அகலம் வீல்பேஸ் போன்றவை அதிகரிக்கப்பட்டு உயரம் மட்டும் 5 மிமீ குறைக்கப்பட்டுள்ளது.  அதாவது 4,380 மிமீ நீளம் , 1,728 மிமீ அகலம், 1,460 மிமீ உயரம் மற்றும் 2,600 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ளதால் சிறப்பான இடவசதியை கொண்டதாக விளங்கும்.

 

இருவிதமான வேரியண்ட் ஆப்ஷனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேஸ் வேரியண்ட்களில் ஹாலஜென் முகப்பு விளக்குகள் , ஸ்டீல் வீல்கள் ,  முன்பக்க கிரிலை சுற்றி க்ரோம் பூச்சூ பெற்றுள்ளது. டாப் வேரியண்டில் புராஜெக்டர் முகப்பு விளக்கு ,எல்இடி ரன்னிங் விளக்குகள் , அலாய் வீல் , சூரிய மேற்கூரை ,ரூஃப் ரெயில்கள் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் 2017 வெர்னா அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு செல்ல உள்ளது. இந்தியாவில் அடுத்த வருடத்தின் புதிய ஹூண்டாய் வெர்னா சந்தைக்கு வரலாம்.