2017 மாருதி வேகன் R ரீஃபிரஷ் விரைவில்

மாருதி வேகன் R காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி வேகன் R ரீஃபிரஷ் மாடல் ரூ.4.14 லட்சத்தில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  புதிய வேகன் ஆர் மாடலின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேகன்ஆர் ரீஃபிரஷ்

புதிய வேகன்ஆர் மாடல் LXI, VXI மற்றும் VXI+ என மூன்று விதமான வேரியன்ட் ஆப்ஷனில் தற்பொழுது இடம்பெற்றுள்ள அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலை பெற்று சிறிய அளவிலான தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை பெற்றதாக விளங்க உள்ளது.

68 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் 90 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி (ஏஜிஎஸ்) கியர்பாக்ஸ் மாடலும் கிடைக்க உள்ளது. புதிய மாடலில் அடிப்படையான பாதுகாப்பு அம்சமாக கருதப்படும் முன்பக்க டியூவல் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டில் இன்டிரியரை பெற்று ஃபேபரிக் இருக்கைகள் , அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவற்றை கொண்டு இருக்கும். மற்றபடி தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை கண்டுள்ளது.

VXI மற்றும் VXI+ வேரியன்டில் மட்டுமே ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் கிடைக்கும்.இதுதவிர சிஎன்ஜி ஆப்ஷன் LXI (O) வேரியன்டில் கிடைக்க உள்ளது.

பட உதவி – டீம்பிஹெச்பி

Recommended For You