Automobile Tamil

பிப்ரவரி 11.., 2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் அறிமுக விபரம்

royal enfield Himalayan blue

ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் பைக்கினை விற்பனைக்கு பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முந்தைய மாடலை விட சிறிய அளவில் ஸ்டைலிங் மாற்றங்கள், புதிய நிறங்கள் மற்றும் டிரிப்பர் நேவிகேஷன் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

என்ஜின் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 23.5 ஹெச்பி பவர், டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மீட்டியோர் 350 பைக்கில் இணைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்போன் மூலமாக ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் கூகுள் நிறுவனத்தின் ஆதரவில் வடிவமைக்கப்பட்ட டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அமைப்பினை கொண்டிருக்கின்றது.

புதிதாக வெள்ளை நிறம், கருப்பு உட்பட புதிய பைன் க்ரீன் நிறம் என மூன்று நிறங்கள் கொண்டிருக்கும். குறிப்பாக டிசைனில், உயரமான ரைடர்களின் காலின் முட்டி பகுதி பெட்ரோல் டேங்க் அருகே கொடுக்கப்பட்டுள்ள மெட்டல் ஃபிரேமில் உரசுவதாக  கிடைத்த குறையை களைவதற்கான நோக்கில் இந்த ஃபிரேம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் மாடலை விட கூடுதலான விலையில் அமைந்திருக்கும் என்பதனால் விலை ரூ.2 லட்சத்தில் துவங்கலாம்.

Exit mobile version