Categories: Auto News

2023 யமஹா FZ-X, MT 15 V2 பைக் விற்பனைக்கு வெளியானது

2023 Yamaha MT 15 V2

இந்திய சந்தையில் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2, E20 உள்ளிட்ட அம்சங்களுடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை பெற்றுள்ள FZ-X, MT 15 V2 என இரு பைக் உட்பட FZ-S,FZ-S V4 மற்றும் R15M , R15 V4 என மொத்தமாக 6 பைக்குகள் இன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து யமஹா பைக்குகளிலும் இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System – TCS) சேர்க்கப்பட்டு இதற்காக பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் வீல் ஸ்பின் ஆகி சாலைகளில் ஏற்படும் டிராக்‌ஷன் இழப்பினை ஈடுகட்டி வாகனம் நிலை தடுமாறுவதனை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2023 யமஹா FZ-X, MT 15 V2

ரெட்ரோ ஸ்டைலை பெற்றுள்ள யமஹா FZ-X பைக்கில் ஏர் கூல்டு 149cc என்ஜின் SOHC, 2 வால்வுகளை கொண்டு அதிகபட்சமாக 12.4PS பவரை 7,250 rpm-ல் வழங்கும் நிலையில் 5,500 rpm-ல் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. புதிய OBD-2 மற்றும் E20 எரிபொருள் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

யமஹா FZ-X விலை ரூ.1,37,639 (காப்பர், பிளாக்) மற்றும் ரூ.1,38,639 (ப்ளூ)

 

2023 யமஹா MT-15 Ver 2.0

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ள MT-15 Ver 2.0 பைக்கில் 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு VVA என்ஜின் அதிகபட்சமாக 18.1bhp மற்றும் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் USD ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் ஆகியவற்றை பெற்றுள்ளது.

புதிய MT-15 Ver 2.0 பைக் விலை ரூ. 1,69,939

(அனைத்தும் தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை)

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

6 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

9 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago