Site icon Automobile Tamilan

2860 நாட்களில் 10 லட்சம் வாகனங்கள் விற்பனை

வணக்கம் தமிழ் உறவுகளே….
டாடா நிறுவனம் உலக அளவில் முன்னனி வகிக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். டாடா சின்ன யானை(ACE) அனைவரும் அறிவீர்கள்.  கடந்த 7 வருடங்களாக சின்ன யானை விற்பனையில உள்ளது.
டாடா ஏஸ் ஆரம்பத்தில் சுமைகளுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.பின்பு பல விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.
2680 நாட்களில் 10,59,135 டாடா ஏஸ் வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. இவற்றில் இந்திய அளவில் 9,97,133 மற்றும் வெளிநாடுகளில் 62,002 ஆகும்.
35e7d tata ace252812529
டாடா ஏஸ் மற்றும் டாடா மேஜிக் என இரண்டிலும் சிறப்பான விற்பனை அடைந்து வருகிறது. அதிகப்படியான டாடா ஏஸ் மற்றும் மேஜிக் இவைகளை அதிகம் வாங்குபவர்கள் யார் என்றால் முதல் முறை வாகனம் வாங்குபவர்கள் மற்றும் மேஜிக் வாகனங்கள் டாக்ஸிகளுக்கு வாங்குகிறார்கள்.
இந்திய அளவில் 1346 ஸோவ்ரூம்களை இயக்கி வருகின்றனர்.
டாடா ஏஸ் உற்பத்தி ஆரம்பித்த காலத்தில் (2004-2005) டாடாவின் புனே ஆலையில் வருடத்திற்க்கு 30,000 வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இயங்கி வந்த்து. பின்பு எதிர்கால வளர்ச்சினை மையமாக வைத்து உத்ராகண்டா ஆலையில் வருடத்திற்க்கு 5,00,000 வாகனங்கள் உற்பத்தி செய்யும் ஆலையை டாடா ஏஸ்க்காக நிறுவினர்.
டாடா ஏஸ் 10 வகைகளில் கிடைக்கின்றது. இவை 1 டன் எடை ஏற்றும் வாகனமாகவும்,டாடா மேஜிக் என ஆட்டோ ரிக்ஸா மற்றும் வேன்டர் எனவும் கிடைக்கிறது.
உலக அளவில் 24 நாடுகளில் டாடா ஏஸ் கிடைக்கிறது அவை அங்கேலா,பங்களாதேஷ்,இலங்கை,நேபாளம்,கேன்யா, இன்னும் சில…
Exit mobile version