3000 டட்சன் ரெடி-கோ கார்கள் 23 நாட்களில் விற்பனை

0

நிசான் நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் டட்சன் பிராண்டில் புதிதாக விற்பனைக்கு வந்த டட்சன் ரெடி-கோ கார் கடந்த 23 நாட்களில் 3000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

datsun-redi-go-launched

Google News

விற்பனைக்கு வந்த ஒரு மாதத்திலே சுமார் 3000 கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூன் மாதம் டட்சன் நிறுவனம் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 4297 ஆகும்.இந்த விற்பனையில் ரெடி-கோ கார் பங்கு மட்டுமே 3000 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்விட் காரின் பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ரெடி-கோ கார் க்ராஸ்ஓவர் கார்களுக்கு இணையான வடிவமைப்பினை குறைவான விலையிலே பெற்றுள்ளது. மேலும் ரெனோ க்விட் , மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் இயான்  போன்ற கார்களுக்கு போட்டியாக ரெடி-கோ அமைந்துள்ளது.

54 hp  ஆற்றலை மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. ரெடி-கோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.17 கிமீ ஆகும்.

க்விட் காரின் தளத்திலே உருவாக்கப்பட்டிருந்தாலும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ,சில கூடுதல் வசதிகளை பெறாமல் பட்ஜெட் விலையில்  ஆடியோ சிஸ்டத்தில் ரேடியோ ,சிடி , யூஎஸ்பி ,ஆக்ஸ் தொடர்புகளை பெற இயலும்.

மேலும் படிக்க ; ரெடி-கோ காரின் முழுமையான சிறப்பு தகவல்கள்

டட்சன் ரெடி-கோ விலை பட்டியல்

Redi-go D – ரூ. 2.39 லட்சம்

Redi-go A – ரூ. 2.83 லட்சம்

Redi-go T – ரூ. 3.09 லட்சம்

Redi-go T(O) – ரூ. 3.19 லட்சம்

Redi-go S – ரூ. 3.34 லட்சம்

Datsun Redi-Go photo gallery

[envira-gallery id=”7303″]