லஞ்சத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெறும் இந்தியர்கள்

0

ஊழல் என்றால் இந்தியா எனும் நிலைக்கு தள்ளப்பட்டு வரும் நமது நாட்டில் 59 சதவிகித இந்தியர்கள் டிரைவிங் டெஸ்ட் செய்யாமலே லைசென்ஸ் பெறுவதாக சேவ் லைஃப் அறக்கட்டளை ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

rto track test

Google News

டிரைவிங் டெஸ்ட்

முக்கிய மெட்ரோ நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 59 சதவிகித  லைசென்ஸ் பெறுபவர்கள் முறையாக டிரைவிங் டெஸ்ட் தேர்வில் வெற்றி பெறாமலே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஆக்ரா நகரில் 12 சதவித லைசென்ஸ் பெறுபவர்கள் மட்டுமே நேர்மையான வழியில் பெறுவதாகவும். மற்ற 88 சதவிகித லைசெஸ்ன்ஸ் பெறுவோர் ஊழல் மூலம் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

traffic signals in tamil

அடுத்து ஜெய்ப்பூர் 74 சதவிகிதம், கவுஹாத்தி 64 சதவிகிதம் மற்றும் 54 சதவித டெல்லி மற்றும் மும்பை வாசிகள் முறையான தேர்ச்சி பெறாமலே லைசென்ஸ் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மொத்தம் 997 ஆர்டிஒ அலுவலகங்களில் வருடத்திற்கு 1.15 கோடி நபர்கள் புதிதாக அல்லது லைசென்ஸ் புதுப்பிதாக தெரிவிக்கப்படுகின்றது.

traffic signals in tamil rto

சராசரியாக நாட்டில் 30-40 லைசென்ஸ்கள் நாள் ஒன்றுக்கு வழங்கப்படுகின்றது. குறிப்பாக டெல்லி போன்ற பெருநகரங்களில் 130 லைசென்ஸ்கள் வழங்குப்படுகின்றது. 2014 உச்சநீதி மன்ற உத்தரவின் படி நாள் ஒன்றுக்கு ஒரு மனிதரால் 130-150 லைசென்ஸ் பெறுபவர்களின் திறமையை சோதிக்க இயலாத எனவே  அதிகபட்சமாக 15-20  லைசெஸ்ன்ஸ் வழங்குவதே சரியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

road accident

மேலும் இந்த சர்வே முடிவுகளில் பெறப்பட்ட முக்கிய விபரங்கள் பின் வருமாறு,

சாலையில் பயணிக்கும் 80 சதவிகித மக்கள பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணருகிறார்கள், மேலும் 82 சதவிகித  பாதாசாரிகள் சாலையை கடக்கும்போது பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணருகிறார்கள், இதில் அதிகபட்சமாக கொச்சியில் 90 சதவிகித மக்கள் பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

phone while driving

ஆய்வில் பங்கேற்ற 31 % பேரின் உறவினர்கள் அல்லது அவர்கள் சாலை விபத்தில் கடுமையாக பாதித்துள்ளதாகவும், 16 சதவிகித மக்கள் சாலை விபத்தால்  உறவினர்கள் அல்லது நண்பர்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வில் பங்கேற்ற மக்கள 91 % சிறப்பான சாலை மற்றும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என ஆதரிக்கின்றனர், மேலும் 81 % பேர் அபராதம் மற்றும் சட்டங்கள் மிக கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 13 லட்சம் உயிர்கள் சாலை விபத்தில் பறிக்கப்பட்டுள்ளதாக சேவ் லைஃப் அறக்கட்டளை ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.