இந்திய ஆட்டோமொபைல் அடையாளங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் கார் பிராண்டினை ரூபாய் 80 கோடி விலையில் பிரான்ஸ் நாட்டின் பீஜோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹெச்எம் அம்பாசிடர் கார் ரூபாய் 6 முதல் 10 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

சமீபத்தில் சிகே பிர்லா நிறுவனம் (ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் உரிமையாளர்) பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஏ குழுமத்துடன் இணைந்து இந்திய சந்தையில் பீஜோ மற்றும் சிட்ரோன் கார்களை விற்பனை செய்யும் நோக்கில் கூட்டணியை அறிவித்துள்ள நிலையில் 56 ஆண்டுகால வரலாற்று புகழ்மிக்க அம்பாசிடர் கார் பிராண்டினை பிஎஸ்ஏ கைப்பற்றியுள்ளது.

அம்பாசிடர் கார் வரலாறு

1954 ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த லேண்ட்மாஸ்டர் (1954-1958) என்ற பெயரில் வந்த மாடலே 1958 ஆம் ஆண்டிற்கு பிறகு அம்பாசிடர் என பெயர் மாற்றப்பட்ட நிலையில் விற்பனைக்கு வந்தது. மாடல்கள் வரிசை வரலாறு………

  • லேண்ட்மாஸ்டர் (1954-1958)
  • அம்பாசிடர் MK1 (1958-1962)
  • அம்பாசிடர் MK2 (1962-1975)
  • அம்பாசிடர் MK3 (1975-1979)
  • அம்பாசிடர் MK4 (1979-1990)
  • அம்பாசிடர் நோவா (1990-1999)
  • அம்பாசிடர் கிரான்ட்/கிளாசிக்/என்கோர் (1999-2014)

இந்திய குடும்பங்கள் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளின் மிக விருப்பமான காராக 1980 முதல் 2000 வரை பெரும்பாலானோரின் அங்கீகரிக்கப்பட்ட மாடலாக முடிசூடா மன்னனாக அம்பாசிடர் விளங்கியது. 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு பண்ணாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வருகைக்கு பின்னர் கட்டுறுதியான கட்டமைப்பினை கொண்ட மாடலாக விளங்கி அம்பாசடர் மற்ற கார்களின் ஸ்டைல் , வசதிகள் போன்றவற்றில் பின்தங்கியதால் சந்தையில் பெரும் வீழ்ச்சியை அடைந்து 2014 ஆம் ஆண்டு சந்தையிலிருந்து நீக்கப்பட்டது.

புதுப்பிக்கப்படுமா அம்பாசிடர் ?

கைமாறியுள்ள அம்பாசிடர் காரின் வரலாறு புதுப்பிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இருநிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் பீஜோ கார்களை சென்னையில் உள்ள சிகே பிர்லா ஹிந்துஸ்தான் ஆலையில் ஒருங்கினைக்கப்பட உள்ளதால் பீஜோ நிறுவனம் ரூ 80 கோடி விலையிஙல் கைப்பற்றியுள்ளதால் அம்பாசிடர் காரை நவீன வசதிகளுடன் மேம்படுத்தி புதிய என்ஜின் மற்றும் டிசைன் கொண்டதாக இந்திய சந்தையில்  முதல் மாடலாக பீஜோ அம்பாசிடர் ரூ 6 முதல் 10 லட்சம் விலையில் விற்பனைக்கு அடுத்த சில ஆண்டுகளில் வரலாம்.

காம்பேக்ட் ரக செடான் கார்களான ஸ்விஃப்ட் டிசையர் ,எக்ஸ்சென்ட் , ஆஸ்பயர் , சிட்டி , அமேஸ் உள்பட பல தொடக்கநிலை செடான்களுக்கு போட்டியாக அம்பாசிடர் கார் அமைந்துள்ளது.

எம்ஜிஆர் அம்பாசிடர் கார்……….