ரூ. 4 கோடி விலையில் ஆஸ்டன் மார்ட்டின் கார் வாங்கிய டெல்லி போலீஸ் ?

சமீபத்தில் டெல்லி போலீஸ் என பேட்ஜ் ஸ்டிக்கரிங் செய்யப்பட்ட ஆஸ்டன் மார்ட்டின் ரேபீட் சொகுசு கார் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த காரினை உண்மையிலே டெல்லி போலீஸார் வாங்கியுள்ளனரா ?

டெல்லி போலீஸ் கார்

இந்தியாவில் ரூ.4.10 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகின்ற ஆஸ்டன் மார்டின் ரேபீட் ஸ்போர்ட்ஸ் காரில் டெல்லி போலீஸ் என பேட்ஜ் செய்யப்பட்டு டயல் 100 எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த படங்கள் இணையத்தில் வெளியாகியதை தொடர்ந்து உண்மையா என்ற கேள்வியும் எழுந்தது.

தற்போது அதற்கான விடையும் வெளியாகியுள்ளது. அதாவது பாலிவுட் நடிகர் சுசந்த் சிங் ராஜ்புட் மற்றும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்  இருவரும் இணைந்து நடிக்கும் டிரைவ் என்ற திரைப்படத்திற்காக இந்த கார் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. எனவே இது ரியல் போலீஸ் கார் அல்ல ரீல் போலீஸ் கார் என தெரியவந்துள்ளது.

470 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 5.2 லிட்டர் வி10 எஞ்சினை பெற்ற ஆஸ்டன் மார்ட்டின் ரேபீட் மிகவும் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றாக விளங்குகின்றது.

Recommended For You