இந்தியாவில் நுழையும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் – ஆட்டோ எக்ஸ்போ 2020

0

ora r1

சீனாவை தலைமையிடமாக கொண்ட கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் ஹவால் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கு ஓரா என்ற பிராண்டையும் கொண்டு வரவுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் மாடலாக ஹவால் H4 எஸ்யூவி வெளியிடப்பட உள்ளது.

இந்நிறுவனம் பெரும்பாலும் தங்கள் எஸ்யூவிகளை ஹவால் பெயரில் விற்பனை செய்கிறார்கள். Wey, Haval, Ora மற்றும் ஜி.வி.எம் பிக்கப் டிரக் என மொத்தம் நான்கு பிராண்டுகளை கொண்டுள்ளது. இது ஆடம்பர கார்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ஐசி என்ஜின் வாகனங்கள் இரண்டின் உற்பத்தியும் இந்தியாவில் உள்ள ஆலையில் நடைபெறும். மேலும், இந்நிறுவனம் பல்வேறு நவீனத்துவமான டெக்னாலாஜி சார்ந்த அம்சங்களை கொண்டு தங்கள் மாடலை வெளியிட வாய்ப்புள்ளது.

gwm india

பிரத்தியேக ட்வீட்டர் பக்கத்தை துவங்கியுள்ள கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம், முதல் டீசரில், ஹவால் H4, ஹவால் H2 எஸ்யூவி மற்றும் Ora R1 எலெக்ட்ரிக் கார் என மூன்றையும் 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்த உள்ளது. ஹவால் (Haval) என்ற தனது பிராண்டின் மூலம் முதல் காரை 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.