ஆட்டோ எக்ஸ்போ 2018 : டாடா மோட்டார்ஸ் எஸ்யூவி, ஹேட்ச்பேக், எல்சிவி டீசர் வெளியீடு

0

Tata Auto Expo teaser 2018வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2018 – தி மோட்டார் ஷோ அரங்கில் டாடா மோட்டார்ஸ் பிரத்தியேக H5 எஸ்யூவி, பிரிமியம் X451 ஹேட்ச்பேக் மற்றும் புதிய இலகு ரக டிரக் ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளதை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் பல்வேறு விதமான நவீன தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களை பெற்ற ஸ்மார்ட் மொபைலிட்டி, ஸ்மார்ட் சிட்டிஸ் ஆகியவற்றை மையமாக கொண்டு பல்வேறு அம்சங்களை இந்நிறுவனம் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

Google News

டாடா X451

மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ் ஆகிய பிரிமியம் ஹேட்ச்பேக்குகளுக்கு எதிராக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் டாடா ஏஎம்பி (Advanced Modular Platform – AMP) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பிரிமியம் ரக எக்ஸ்451 (குறியீடு பெயர்) மாடல் குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களை பெற்றதாக வரவுள்ள இந்த மாடலில் டியாகோ காரில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் நெக்சன் காரில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பெற்றதாக, இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும்.

டாடா H5 எஸ்யூவி

இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அடிப்படையிலான  L550 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள இந்த ஹெச்5 எஸ்யூவி உயர்ரக அம்சங்களை பெற்ற குறைந்த விலை எஸ்யூவி மாடலாக விளங்கும். இந்த மாடலில் ஃபியட் கிறைஸலர் வசமுள்ள FCA’s 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது.

டாடா LCV

தொடக்கநிலை இலகுரக வாகன சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை பெற்ற நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்சின் புதிய எல்சிவி மாடல் பல்வேறு நவீன அம்சங்களை பெற்றதாக காட்சிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

tata motors auto expo 2018

முன்பே இந்நிறுவனம் வெளியீட்டிருந்த டீசர் படத்தில், ஸ்மார்ட் மொபைலிட்டி,ஸ்மார்ட் சிட்டிஸ் என்ற கான்செப்ட்டைவ பின்புலமாக மையப்பட்டுத்தியிருந்த நிலையில், மின்சாரத்தில் இயங்கும் டியாகோ இவி உட்பட பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

மேலதிக விபரங்களுக்கு தொடர்ந்து படிக்க ; ஆட்டோ எக்ஸ்போ 2018 செய்திகள்