மாருதி ஆல்டோ டீசல் வருகை – ஆட்டோ எக்ஸ்போ 2016

டீசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி ஆல்டோ 800 கார் வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது. புதிய ஆல்டோ காரில் கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற பொலிவினை பெற்றிருக்கும்.

ஆல்ட்டோ
மாருதி ஆல்டோ 800

ரெனோ க்விட் காரின் வரவால் விற்பனை இழப்பினை சந்தித்து வரும் ஆல்டோ காரின் விற்பனை அதிகரிக்கும் நோக்கில் புதிய மேம்படுத்தப்பட்ட ஆல்டோ மற்றும் டீசல் என்ஜின் வேரியண்ட் ஆகியவற்றில் வரவுள்ளது.

47பிஹெச்பி ஆற்றலை வழங்கும் செலிரியோ காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 793சிசி டீசல் என்ஜின் ஆல்டோ காரிலும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதன் டார்க் 125என்எம் ஆக இருக்கலாம். மேலும் மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஏஎம்டி மாடலிலும் சந்தைக்கு வரவாய்ப்பு உள்ளது.

கடந்த இரு தசாப்தங்களாக தொடர்ந்து விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வரும் ஆல்டோ 800 கார் இந்தியாவிலே அதிகம் விற்பனையான மாடலாகும். தற்பொழுது மாருதி விற்பனையில் உள்ள ஆல்டோ 800 காரில் 48பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 796சிசி பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறைவான விலையில் மிக தரமான காராகவும் , அதிக பாரமரிப்பு செலவு இல்லாத காரணத்தாலும் மாருதி சுசூகி நிறுவனத்தின் வளமான சர்வீஸ் நெட்வொர்க்கால் ஆல்டோ விற்பனையில் சிறந்து விளங்கி வருகின்றது.

ஆல்டோ காரின் சக்தி வாய்ந்த மாடலாக ஆல்டோ கே10 விளங்கி வருகின்றது. இதில் 1.0 லிட்டர் என்ஜின் , மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது.