டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் ஹீரோ மோட்மோகார்ப் 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹீரோ எக்ஸ்டீரிம் 200S ஸ்போர்ட்டிவ் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்டீரிம் 200 எஸ் அடுத்த வருட தொடக்கத்தில் விற்பனைக்கு வரும்.

hero-xtreme-200s-auto-expo-2016

200சிசி சந்தையில் மிக சிறப்பான மாடலாக வலம் வருகின்ற பல்சர் 200 வரிசை  பேக்கிற்கு சவாலாக சில வாரங்களுக்கு முன்னர் டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் விற்பனைக்கு வந்தது. அதனை தொடர்ந்து ஹீரோ நிறுவனம் நேக்டு பைக்காக 200S மாடலை வெளியிட்டுள்ளது.

எதிர்கால மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்டீரிம் 200S பைக்கில் 18.6 PS ஆற்றலை 8500 rpm மற்றும் 17.2 Nm டார்க்கினை 6000 rpm சுற்றில் வழங்கும் புதிய ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 200cc 4 ஸ்டோர்க் என்ஜினை பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றிருக்கும்.

சிறுத்தைப்புலி (ceetah) தோற்றத்தினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஹீரோ எக்ஸ்டீரிம் 200S மாடல் மிக இளமையான தோற்ற அமைப்புடன் ஸ்டைலிங்கான ஸ்டிக்கர்களை பெற்று விளங்குகின்றது.

hero-xtreme-200s

 

hero-xtreme-200s

 

முன் மற்றும் பின்பக்கங்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் , ஏபிஎஸ் பிரேக் , மோனோ ஷாக் அப்சார்பர் போன்றவற்றை பெற்றுள்ளது. முன்பக்கத்தில் கண்கள் போன்ற எல்இடி விளக்குகள் போன்றவற்றை பெற்றுள்ளது.