இந்தியாவின் பிரசத்தி பெற்ற பஜாஜ் ஆட்டோவின் பல்சர் 250 வரையும், பிளாட்டினா, ஃப்ரீடம் 125, என 350ccக்கு குறைவாக உள்ள அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ரூ.20,000 வரை விலை குறைக்கப்பட உள்ள நிலையில், இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.24,000 வரை விலை குறைக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்நிறுவனத்தின் மாடல்கள் மட்டுமல்லாமல் டியூக் 160, டியூக் 250, டியூக் 200 கேடிஎம், ஹஸ்குவர்னா போன்றவற்றின் விலையும் குறைய உள்ளது. ஆனால் டிரையம்ப் பைக்குகள், டியூக் 390 உட்பட பல்வேறு மாடல்கள், பல்சர் என்எஸ்400 ஆகியவை ரூ.25,000 முதல் அதிகபட்சமாக கேடிஎம் மாடல்கள் ரூ.40,000 வரை விலை உயர்த்தப்படலாம்.
தற்பொழுது மாடல்கள் வாரியாக எவ்வளவு குறைக்கப்படும் என்பதனை தெளிவாக குறிப்பிடவில்லை, இணையதளத்தில் செப்டம்பர் 22 முதல் கிடைக்கலாம்.
சமீபத்திய ஜிஎஸ்டி குறைப்பின் பலனை அதன் தொடர்புடைய பஜாஜ் மற்றும் கேடிஎம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று சக்கர வாகன வகைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வருவதால், இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் குறைந்த விலைகளுடன் பண்டிகைக் காலத்தின் ஆரம்ப தொடக்கத்தைக் கொண்டாடலாம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.