பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டிருந்த ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கில் NG04 டிஸ்க் எல்இடி, NG04 டிரம் எல்இடி மற்றும் NG04 டிரம் என மூன்று விதமான வேரியண்டுகள் பெற்று இருக்கின்றது. புதிதாக பஜாஜ் உருவாக்கியுள்ள 125 சிசி என்ஜின் ஆனது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு 9.5 hp பவர் மற்றும் 9.7Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேகத்தில் கியர் பாக்ஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
நேரடியாக சிஎன்ஜியில் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் 125ல் பெட்ரோல் என்பது ஒரு துணை எரிபொருளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இருந்த பொழுதும் அவ்வப்பொழுது பெட்ரோலில் இன்ஜினை இயக்குவது என்ஜினின் ஆயுள் காலத்தை அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கும். முழுமையாக சிஎன்ஜியில் இயங்கும் வகையிலும் இந்த எஞ்சின் ஆனது வடிவமைக்கப்பட்டிருப்பதால் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்ப்படாது என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
ரூபாய் 95 ஆயிரம் ஆரம்ப விலையில் துவங்குகின்ற NG04 டிரம் மாடலில் சாதாரண ஹாலாஜன் பல்புடன் கிரே மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களுடன் இரு பக்க டயர்களிலும் 130 மில்லி மீட்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி இதில் கம்பையின்ட் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. டிஜிட்டல் கிளஸ்டர் ஆனது சிறிதாக கொடுக்கப்பட்டிருந்தாலும் இதில் கனெக்டிவிட்டி சார்ந்த எந்த ஒரு வசதியும் பெறுவதற்கு வாய்ப்பில்லை. டயர் அளவில் இந்த வேரியண்ட முன்புறத்தில் 80/90 -17 (TL) மற்றும் பின்புறத்தில் 80/100 -16 (TL) பெற்றுள்ளது.
ரூபாய் 1,05,000 விலையில் துவங்குகின்ற NG04 எல்இடி மாடலில் எல்.இ.டி ஹெட்லைட்டுடன் வெள்ளை, சிவப்பு நீலம், கிரே மற்றும் பிளாக் என ஐந்து நிறங்களுடன் இரு பக்க டயர்களிலும் 130mm டிரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி இதில் கம்பையின்ட் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. டிஜிட்டல் கிளஸ்டர் ஆனது சிறிதாக கொடுக்கப்பட்டிருந்தாலும் இதில் கனெக்டிவிட்டி சார்ந்த எந்த ஒரு வசதியும் பெறுவதற்கு வாய்ப்பில்லை. இதில் கூடுதலாக ஃபிளாப் டேங்க் கவர் மற்றும் கீழே இன்ஜினுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெல்லி பேனில் சீட் மெட்டலுடன் பிளாஸ்டிக் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. டயர் அளவில் இந்த வேரியண்ட முன்புறத்தில் 90/80 -17 (TL) மற்றும் பின்புறத்தில் 120/70 -16 (TL) பெற்றுள்ளது.
ரூபாய் 1,10,000 விலையில் துவங்குகின்ற NG04 எல்இடி மாடலில் எல்.இ.டி ஹெட்லைட்டுடன் வெள்ளை, சிவப்பு நீலம், கிரே மற்றும் பிளாக் என ஐந்து நிறங்களுடன் முன்புறத்தில் 240mm டிஸ்க் பிரேக்குடன் பின் பக்கத்தில் 130mm டிரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி இதில் கம்பையின்ட் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. டிஜிட்டல் கிளஸ்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி சார்ந்த வசதிகள் பெற்று இருக்கின்றது. இதில் கூடுதலாக ஃபிளாப் டேங்க் கவர் மற்றும் கீழே இன்ஜினுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெல்லி பேனில் சீட் மெட்டலுடன் பிளாஸ்டிக் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. டயர் அளவில் இந்த வேரியண்ட முன்புறத்தில் 90/80 -17 (TL) மற்றும் பின்புறத்தில் 120/70 -16 (TL) பெற்றுள்ளது.
CNG ஒரு கிலோ எரிபொருளுக்கு 102 கிலோமீட்டர் மற்றும் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டர் வழங்கும் எனவே ஒட்டு மொத்தமாக 330 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் 125 மாடலின் எடையானது 149 கிலோ கிராம் ஆக உள்ளது முதற்கட்டமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூபாய் 1,999 வசூலிக்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் விற்பனைக்கு கிடைக்கும்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…