Automobile Tamilan

2024 பஜாஜ் Pulsar N160 பைக்கின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை

new 2024 bajaj pulsar n150 and pulsar n160

மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்றுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் Pulsar N160 மாடலில் இரு விதமான வேரியண்டுகளின் என்ஜின், ரைட் கனெக்ட் ஆப் வசதி மற்றும் விலை என அனைத்து முக்கிய சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

150-160cc சந்தையில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்கி வருகின்ற பல்சர் என்150 மற்றும் பல்சர் என்160 பைக்குகளில் சமீபத்தில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் கிளஸ்ட்டரை அறிமுகம் செய்திருந்தது.

2024 பஜாஜ் Pulsar N160

புதிய 2024 பல்சர் என்160 பைக்கில் தற்பொழுது முந்தைய மாடலை அடிப்படையாக கொண்ட வேரியண்ட் மற்றும் கூடுதலாக டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றதாக வந்துள்ள ரைட் கனெக்ட்டின் ஆதரவினை பெற்றுள்ள வேரியண்ட் கூடுதலாக போல்ஸ்டார் ப்ளூ என்ற நிறத்தையும் இந்த பல்சர் பைக் கொண்டுள்ளதால் கவர்ச்சிகரமான ஒன்றாக காட்சியளிக்கின்றது.

தொடர்ந்த இந்த N160 பைக்கின் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல், 164.82cc, ஒற்றை சிலிண்டர் ஆயில்-கூல்டு என்ஜின் பவர் 16 PS மற்றும் 14.6 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் உள்ளது. மிக சிறப்பான ரைடங்கை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ள என்ஜினில் மைலேஜ் சராசரியாக லிட்டருக்கு 45-50 கிமீ வரை வெளிப்படுத்துவதாக பயனர்கள் வெளிப்படுத்திய தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க – பல்சர் என்150 பைக்கின் விலை மற்றும் சிறப்புகள்

அடிப்படையான பேஸ் வேரியண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் செமி அனலாக் முறையிலான கிளஸ்ட்டர் கொண்டுள்ளதால் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1.31 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) கிடைக்கின்றது.

புதிய டாப் வேரியண்டில் கூடுதலாக உள்ள ஒரே அம்சம் டிஜிட்டல் எல்சிடி திரையை பெற்ற கிளஸ்ட்டர் ஸ்மார்ட்போனை ப்ளூடுத் வாயிலாக இணைப்பதனால் கிடைக்கின்ற கனெக்ட்டிவிட்டி வசதியின் காரணமாக ரூ.1.33 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) கிடைக்கின்றது.

பஜாஜ் ரைட் கனெக்ட் ஆப்

போட்டியாளர்களிடம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வரை இடம்பெற்றிருந்தாலும் அடிப்பையான ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போனை இணைக்கின்ற வசதியை பெற்றுள்ள பல்சரில் அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதி உட்பட மொபைல் தொடர்பான அம்சங்கள், பைக்கின் பெட்ரோல் இருப்பு, மைலேஜ் விபரம் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ள உதவுகின்றது.

மெக்கானிக்கல் அம்சங்கள்

முந்தைய சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கைவிடப்பட்டுள்ளதால், தற்பொழுது இருபக்க டயர்களிலும் 300 மிமீ டிஸ்க் மற்றும் 280 மிமீ டிஸ்க் பிரேக்குடன் இரு மாடல்களிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் மட்டுமே உள்ளது. இந்த 160சிசி பிரிவில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட ஒரே மாடலாக பல்சர் என்160 பைக் உள்ளது.

37mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் உடன் என்160 மாடலில் 1358 mm வீல்பேஸ், கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 mm, இருக்கை உயரம் 795 mm மற்றும் கெர்ப் எடை 154 கிலோ கொண்டு பெற்று 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உடன் 100/80–17 டயருடன் பின்புறத்தில் 130/70–17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது.

பஜாஜ் Pulsar N160 விலை பட்டியல்

பல்சர் என்160 பைக்கிற்கு போட்டியாக  டிவிஎஸ் அப்பாச்சி, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் ஹோண்டா SP160 சந்தையில் கிடைக்கின்றது.

2024 Bajaj Pulsar N160 Ex-showroom on-road Price
Pulsar N160 ₹ 1.31 லட்சம் ₹ 1.59 லட்சம்
Pulsar N160 Ride connect ₹ 1.33 லட்சம் ₹ 1.63 லட்சம்

(All price Tamil Nadu)

Exit mobile version