புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் 2024 பஜாஜ் பல்சர் N150 மற்றும் பல்சர் N160 அறிமுகம்

new 2024 bajaj pulsar n150 and pulsar n160

பஜாஜ் ஆட்டோ தனது பல்சர் N150 மற்றும் பல்சர் N160  இரு மாடல்களில் முதன்மையாக டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டதாக ரைட் கனெக்ட் ஆப் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில நாட்களுக்குள் விலை அறிவிக்கப்பட உள்ளது.

விற்பனையில் உள்ள பல்சர் என்150 விலை ரூ.1.18 லட்சமும், பல்சர் என்160 விலை ரூ. 1.30 லட்சமாக கிடைத்து வருவதானல் கூடுதலாக எல்சிடி டிஸ்பிளே கிளஸ்ட்டர் கனெக்ட்டிவ் வசதிகள் பெற்றுள்ளதால் விலை ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

பஜாஜின் ரைட் கனெக்ட் வசதி மூலம் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போனை இணைத்தால் அழைப்புகளை ஏற்பது அல்லது நிராகரிக்கும் வசதி, எஸ்எம்எஸ் அலர்ட்,  பேட்டரி மற்றும் மொபைல் சிக்னல் விபரத்தை கிளஸ்ட்டரில் கொண்டுள்ளது. இதுதவிர கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பெட்ரோல் இருப்பு, சராசரி மைலேஜ், மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மற்றபடி, மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது. 150cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14.5hp பவர் மற்றும் 13.5Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் இந்த மாடலில் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் பெறுகிறது.

பல்சர் என்160 பைக்கில் 164.82cc, ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 15.7 bhp மற்றும் 14.6 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2024 bajaj pulsar n160-and pulsar n150 ride connect app features

டீலர்களுக்கு பல்சர் என்150 மற்றும் என்160 வந்துள்ளதால் புதிய மாடலின் 2024 ஆம் ஆண்டிற்கான விலை அடுத்த சில நாட்களுக்குள் அறிவிக்கப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *