அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

0

ஸ்டைலிசான க்ராஸ்ஓவர் ஸ்கூட்டர் மற்றும் ரேஸ் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் ரூ.65,000 அறிமுக விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 2015 வேர்ல்டு சூப்பர்ஸ்டாக் பைக் பந்தய சாம்பியன் லாரென்ஸோ சவடோரி எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்தார்.

பியாஜியோ குழுமத்தின் அங்கமான ரேஸ் பைக்குளுக்கு பிரசத்தி பெற்ற  அப்ரிலியா பிராண்டில் வெளிவந்துள்ள முதல் ஸ்கூட்டராக விளங்கும் எஸ்ஆர் 150 மாடல் இந்தியா முழுவதும் உள்ள பியாஜியோ வெஸ்பா டீலர்கள் மற்றும் மோட்டோபிளக்ஸ்ஆகியவற்றில் கிடைக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய பேடிஎம் தளத்தினை அனுகலாம்.

Google News

அப்ரிலியா SR 150 ஸ்கூட்டரில் 11.4 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 154.4 சிசி இஞ்ஜின் டார்க் 11.5Nm ஆகும். அப்ரிலியா SR 150  மைலேஜ் லிட்டருக்கு 45 கிமீ கிடைக்க வாய்ப்புள்ளது.  இந்த ஸ்கூட்டர் மணிக்கு மிக இலகுவாக 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கான செயல்திறனை பெற்றுள்ளது.

6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் , இரட்டை பிரிவு ஹெட்லைட் , ஸ்டைலிசான கிளாசிக் தோற்ற அமைப்புடன் கூடிய வட்ட வடிவ இரட்டை டயல்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பாஸ் சுவிட்ச் போன்றவற்றை கொண்டுள்ளது.

aprilia-sr-150-headlight

ஸ்போர்ட்டிவ் டிசைன் தாத்பரியங்களுடன் அமைந்துள்ள ஸ்கூட்டரில் மேட் பிளாக் மற்றும் வெள்ளை என இரு வண்ணங்களுடன் கூடிய ஸ்டைலிசான ரேஸ் பாடி கிராபிக்ஸ் கொண்டுள்ளதால் இளைய தலைமுறையினர் பெரிதும் விரும்பும் மாடலாக அமைந்துள்ளது.

இந்தியாவிலே அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் 90 சதவீத பாகங்கள்  உற்பத்தி செய்யப்பட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள பியாஜியோ பார்மதி ஆலையில் தயாரிக்கப்படுவதனால் மிகுந்த சவாலான விலையில் எஸ்ஆர்150 வெளிவந்துள்ளது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 படங்கள்