Home Bike News

ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்தது

கோவையை சேர்ந்த ஆம்பியர் மின் ஸ்கூட்டர் தயாரிப்பாளர், புதிதாக இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் லித்தியம் ஐயன் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. ஆம்பியர் வி48 ஸ்கூட்டர் மற்றும் ஆம்பியர் ரியோ Li-Ion ஸ்கூட்டருக்கு வாகனப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

கடந்த 2008 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்ட ஆம்பியர் நிறுவனம் தொடர்ந்து உள்நாட்டில் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் சொந்த முயற்சியில் தயாரிக்கப்பட்ட லித்தியம் ஐயன் சார்ஜரை இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

48 வோல்ட் திறன் பெற்ற லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்ட இரு மாடல்களான ரியோ மற்றும் V48 ஆகிய இரு ஸ்கூட்டர்களிலும்  250W ப்ரூஸ்லெஸ் மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் 60 கிமீ முதல் 70 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும்.  இந்த ஸ்கூட்டர்கள் முழுமையான சார்ஜ் ஆவதற்கு 4 முதல் 5 மணி நேரம் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

வி48 ஸ்கூட்டர் அதிகபட்சமாக 100 கிலோ எடை பளு தாங்கும் திறனை கொண்டிருக்கின்றது. இதே போன்று ரியோ Li-Ion ஸ்கூட்டர் மாடல் 120 கிலோ எடை பளு தாங்கும் திறனை பெற்று விளங்குகின்றது.

ரூ. 3000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லித்தியம் ஐயன் சார்ஜர் இரு விதமான ஸ்டேஜ்களை பெற்று விளங்குகின்றது. குறிப்பாக சார்ஜிங் வோல்டேஜ் மற்றும் கரன்ட் லெவல் ஆகியவற்றை கொண்டுள்ளது. மைக்ரோ கன்ட்ரோலர் வாயிலாக கட்டுப்படுத்தப்பட்டு தானாகோவே சார்ஜ் முழுமை அடைந்தால் கட்-ஆஃப் செய்யும் அம்சத்துடன், இந்த பேட்டரி திறன் 48V, 20Ah or 24Ah கொண்டதாக உள்ளது.

ஆம்பியர் ரியோ Li-Ion ஸ்கூட்டர் – ரூ. 46,000

ஆம்பியர் வி48 ஸ்கூட்டர் – ரூ. 38,000

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

14 மாநிலங்களில் ஊரக பகுதிகளை குறிவைத்து விற்பனை செய்து வரும் ஆம்பியர் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகின்றது.

 

Exit mobile version