ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் அறிமுகம்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் புதிய வரவாக ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் ஒகினாவா ரிட்ஜ் என்ற பெயரில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை ரூ.43,702 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

 

ஒகினாவா ஆட்டோடெக்

குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனத்தின் (Okinawa Autotec ) ஆலை ராஜஸ்தான் மாநிலத்தின் பீவாடி பகுதியில் அமைந்துள்ளது. தற்பொழுது ராஜஸ்தான் , ஹரியானா , டெல்லி , பஞ்சாப் மற்றும் மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் 24 டீலர்களை கொண்டுள்ள ஒகினாவா அடுத்த மூன்று வருடத்தில் நாடு முழுவதும் 450க்கு மேற்பட்ட டீலர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

ஒகினாவா ரிட்ஜ்

ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக வெளியிடப்பட்டுள்ள ஒகினாவா ரீட்ஜ் மாடலானது மற்ற எலக்ட்ரிக் ஸ்கட்டர்களை போல அல்லாமல் சக்திவாய்ந்த மாடலாகவும் , மிக விரைவாக சார்ஜ் ஏறும் வசதியை பெற்றதாக விளங்குகின்றது.

18 முதல் 60 வயது உள்ளவர்களுக்கு ஏற்ற ஸ்கூட்டராக விளங்குகின்ற ரிட்ஜ் பேட்டரி ஸ்கூட்டரில் அதிகபட்சமாக மணிக்கு 55கிமீ வேகத்தில் பயணிக்க இயலும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் அதிகபட்சமாக 80 கிமீ முதல் 90 கிமீ வரையிலான தொலைவுக்கு பயன்படுத்த ஏற்றதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி முழுதாக சார்ஜ் ஏற 6 முதல் 12 மணி நேரம் வரை சராசரியாக சாதரன சமயத்தில் தேவைப்படும். ஃபாஸ் சார்ஜிங் முறையை பயன்படுத்தினால் 1 முதல் 2 மணி நேரத்துக்குள் முழுமையாக சார்ஜ் ஏறிவிடும்.

மேலும் ரிட்ஜ் ஸ்கூட்டரில் அலாய் வீல் , டிஜிட்டல் கிளஸ்ட்டர் , சிறப்பான இடவசதி கொண்ட இருக்கைக்கு அடியில் ஸ்டோரேஜ் போன்றவற்றுடன் 150 கிலோ வரையிலான எடை தாங்கும் திறனை பெற்றதாக விளங்கும்.  மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போல அல்லாமல் பதிவு செய்வது கட்டாயமாகும்.

ஒகினாவா ரிட்ஜ் விலை ரூ.43,702 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)