கேடிஎம் பைக்குகள் விலை உயர்ந்தது..! – ஜிஎஸ்டி வரி

0

ஜிஎஸ்டிக்கு பிறகு 350சிசி-க்கு கூடுதலான திறன் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கேடிஎம் டியூக் மற்றும் கேடிஎம் ஆர்சி வரிசை பைக்குகளை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

2017 ktm duke 200 launch

Google News

கேடிஎம் பைக்குகள் – ஜிஎஸ்டி

டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் கேடிஎம் டியூக் முதல் ஆர்சி பைக்குகள் விலையை ரூ. 628 முதல் ரூ. 5797 வரை உயர்த்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு நிறுவனங்களும் 350சிசி க்கு குறைவான மாடல்களை விலை குறைத்திருந்தாலும்,இதற்கு மாற்றாக டியூக் 200 , டியூக் 250 மற்றும் ஆர்சி 200 மாடல்களை கேடிஎம் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

ktm 250 duke

அதிகபட்ச விலை ஏற்றத்தை கேடிஎம் ஆர்சி390 பைக் ரூ. 5797 வரை உயர்த்தப்பட்டு தற்போது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 2.31 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது. குறைந்தபட்ச விலை உயர்வாக கேடிஎம் 390 டியூக்மாடல் ரூ. 678 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

2017 KTM Duke 390 sideview

உயர்த்தப்பட்டுள்ள விலை விபரம் மாநிலம் வாரியாக உயர்த்தப்பட்டிருந்தாலும் விலை விபரங்களில் குறிப்பிட்ட அளவே மாற்றங்கள் இருக்கும். கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் முந்தைய மற்றும் ஜிஎஸ்டி விலையுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மாடல் முந்தைய விலை ஜிஎஸ்டி விலை   வித்தியாசம்
கேடிஎம் 200 டியூக் ரூ.1,43,500 ரூ. 1,47,563 ரூ.4063
கேடிஎம் 250 டியூக்  ரூ. 1,73,000 ரூ. 1,77,424 ரூ.4,427
கேடிஎம் 390 டியூக்  ரூ. 2,25,730 ரூ. 2,26,358 ரூ.628
கேடிஎம் RC 200 ரூ. 1,71,740 ரூ. 1,76,527 ரூ.4787
கேடிஎம் RC 390  ரூ. 2,25,300 ரூ.2,31,097 ரூ.5797

வழங்கப்பட்டுள்ள அனைத்து மாற்றங்களும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ktm rc390