ஜாவா 660 வின்டேஜ் பைக் அறிமுகம் – ஐரோப்பா

இந்தியாவின் மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற கிளாசிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக ஜாவா 660 வின்டேஜ் மற்றும் ஜாவா 350 OHC என இரு மாடல்களை செக் குடியரசில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஜாவா 660 வின்டேஜ் பைக்

  • ஜாவா 660 வின்டேஜ், ஜாவா 350 OHC என இரு பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஜாவா 660 வின்டேஜ் பைக் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடலின் மேமுபட மாடலாகும்.
  • இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் 2018 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம்

கடந்த ஆண்டு மஹிந்திரா நிறுவனம் ஜாவா மற்றும் பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் நிறுவனங்களை வாங்கியதை தொடர்ந்து செக் நாட்டில் 660 வின்டேஜ் பைக் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களை மட்டுமே செய்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

முந்தைய ஆற்றலில் மாற்றமில்லாமல் வின்டேஜ் 660 பைக்கில் அதிகபட்சமாக 49hp பவரை வெளிப்படுத்துவதுடன்  57.5Nm டார்க்கினை வழங்கும் 660cc பேரலல் ட்வீன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

வின்டேஜ் மாடல் மிக சிறப்பான கிளாசிக் தோற்ற அமைப்புடன் விளங்குகின்ற மாடலாகும். இந்தியாவில் ஜாவா பைக்குகளை மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க -> ஜாவா 350 ohc என்ற பைக் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

660 வின்டேஜ் படங்கள்

Recommended For You