சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் பைக்குகளில் சிறப்பு பதிப்பினை பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஜிக்ஸெர் எஸ்பி எடிசன் விலை கூடுதலாக அமையலாம்.
ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் என இரு மாடல்களிலும் வரவுள்ள ஜிக்ஸெர் எஸ்பி எடிசனில் புதிய வண்ணமாக மேட் கிரே வண்ணத்துடன் செக்கட் கொடி ஸ்டிக்கரிங்கினை பெற்று சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவை இருக்கையுடன் அலாய் வீல் ஸ்டைர்ப் பெற்றிருக்கும். ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
ஜிக்ஸெர் மாடல் நேகட் பைக்காகவும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல் அலங்கரிங்கப்பட்ட பைக் மாடலாக விற்பனையில் உள்ளது.இரு மாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்று சிறப்பான சந்தை மதிப்பினை 150சிசி மார்கெட்டில் பெற்று விளங்குகின்றது.
14.6 பிஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 155சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 14 என்எம் ஆகும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. சுசூகி ஈகோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ள இரு பைக்குகளின் மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ வரை கிடைக்கும்.
சுசூகி ஜிக்ஸ்ர் SF பைக் விலை
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண…
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலில் ரைடிங் மோட் இணைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி…
இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்…
இந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு ரூபாய்…
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் குறைவான விலையில் கிடைக்கின்ற பஜாஜின் பிளாட்டினா 100 ES மாடல் விலை ரூ.53,920 ஆக…
ரூ.3.18 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய…