டிவிஎஸ் அப்பாச்சி RR310S பைக் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடி மாடலாக களமிறங்க உள்ள டிவிஎஸ் அப்பாச்சி RR310S பைக்கில் இடம்பெறப்போகும் முக்கிய வசதிகள் மற்றும் விலை உள்பட பல்வேறு விபரங்களை தொகுப்பாக அறிந்து கொள்ளலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி RR310S

ஓசூரில் செயல்படுகின்ற டிவிஎஸ் நிறுவனம் ஜெர்மனி நாட்டின் மிக பிரசத்தி பெற்ற பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்துடன் இணைந்த தயாரித்த முதல் மாடலான பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கினை தொடர்ந்து அதன் அடிப்பையிலே முழுதும் அலங்கரிக்கப்பட்ட அதாவது Full faring செய்யப்பட்ட மாடலாக அப்பாச்சி ஆர்ஆர்310எஸ் களமிறங்க உள்ளது.

டிசைன்

டிவிஎஸ் அகுலா என 2016 டெல்லி  ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட மாடல் கான்செப்டை அடிப்படையிலே தற்போது அப்பாச்சி ஆர்ஆர்310எஸ் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் எனும் நேக்டூ ஸ்போர்ட்டிவ் பைக் மாடலின் அடிப்படை தாத்பரியங்கள்  மற்றும் உதிரிபாகங்ள் என பலவற்றை பெற்றதாக இந்த மாடல் அமைந்திருக்கும்.

முன்புறத்தில் இரட்டை பிரிவுகொண்ட வட்ட வடிவ புராஜெக்டர் முகப்பு விளக்குளுடன் மிக நேர்த்தியான எல்இடி ரன்னிங் விளக்குகளை கொண்டு பக்கவாட்டில் ஃபேரிங் செய்யபட்ட பேனல்களை கொண்டுள்ளது.

இரட்டை பிரிவு கொண்ட இருக்கைகளை பெற்றுள்ள அப்பாச்சி RR310S பைக்கில் பின்புறத்திலும் எல்இடி டெயில் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான சோதனை ஓட்ட படங்களின் அடிப்படையில் இந்த பைக் பெற்றுள்ள செங்குத்தான இன்ஸ்டூருமென்ட் கன்சோல் வழியாக ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர், எரிபொருள் அளவு, கியர் பொசிஷன் இன்டிகேட்டர் சைட் ஸ்டான்டு இன்டிகேட்டர் போன்றவை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எஞ்சின்

Apache RR310S பைக்கில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே 313சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  34 bhp ஆற்றல் மற்றும் டார்க் 28 Nm வெளிப்படுத்தும் 313சிசி எஞ்ஜினே டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கில் இடம்பெற உள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். டிவிஎஸ் அப்பாச்சி RR310S பைக் மைலேஜ் லிட்டருக்கு 36 கிமீ வரை எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ வரை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பம்சங்கள்

இந்த பைக்கில் புராஜெக்டர் விளக்குகளுடன் எல்இடி ரன்னிங் விளக்குகள் ,ஏபிஎஸ் பிரேக் ,டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்டூருமென்ட் கன்சோல், மிச்செலின் பைலட் ஸ்போர்ட் ரேடியல் டயர் போன்றவற்றுடன் வரவுள்ளது.

வருகை

அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR310S பைக் சந்தையில் கிடைக்க தொடங்கலாம்.

விலை

TVS Apache RR 310S பைக் விலை ரூ. 1.90 லட்சம் முதல் 2.30 லட்சம் விலைக்குள் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

TVS Apache RR 310S spy pics

Recommended For You