டிவிஎஸ் ஜூபிடர் மில்லியன்ஆர் எடிசன் அறிமுகம் – updated

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 1 மில்லியன் விற்பனை இலக்கினை கடந்ததை கொண்டாடும் வகையில் புதிய டிவிஎஸ் ஜூபிடர் மில்லியன்ஆர் எடிசன் ரூ.53,034 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TVS-jupiter-MillionR-1

 

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள ஜூபிடர் ஸ்கூட்டரில் 8 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8 Nm ஆகும் . இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈக்கோ மற்றும் புரோ என இரு விதமான டிரைவ் மோடினை பெற்றுள்ள ஜூபிடரின் மைலேஜ் லிட்டருக்கு 62 கிமீ ஆகும்.

ஜூபிடர் ஸ்கூட்டர் 10 இலட்சம் விற்பனை இலக்கினை கடந்ததை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மில்லியன்ஆர் எடிசனில் 10 சிறப்பு வசதிகள் இடம்பிடித்துள்ளன.  புதிய ராயல் வைன் கலர் , முன்பக்க டயருக்கு டிஸ்க் பிரேக் , இரு வண்ண இருக்கை , பீஜ் பேனல்ஸ் , மொபைல் சார்ஜர் , க்ரோம் சைட் பேனல் , க்ரோம் மிரர் , பீஜ் வண்ணத்தில் மிதியடி , மில்லியன்ஆர் கீரிங் , மில்லியன்ஆர் பேட்ஜ் போன்றவற்றை பெற்றுள்ளது.

tvs-jupiter-millionR-edition-born

வீகோ ஸ்கூட்டரில் உள்ள 220மிமீ டிஸ்கினை ஜூபிடர் ஸ்கூட்டரும் பெற்றுள்ளது. பின்பக்க டயரில் 130மிமீ டிரம் பிரேக் கொண்டுள்ளது. தற்பொழுது ஜூபிடர் மில்லியன்ஆர் எடிசன் டீலர்களிடம் கிடைக்கின்றது.

TVS Jupiter MillionR Edition Photo gallery

 

 

Recommended For You

About the Author: Rayadurai