டிவிஎஸ் விகட்ர் பைக் விற்பனைக்கு வந்தது

0

ரூ. 49,490 விலையில் புதிய டிவிஎஸ் விக்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 25 வயது முதல் 40 வயது உள்ள குடும்ப தலைவர்கள் மற்றும் எக்ஸ்கூட்டிவ்களை கருத்தில் கொண்டு லிட்டருக்கு 76 கிமீ மைலேஜ் தரும் டிவிஎஸ் விக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2001 முதல் 2007 வரை சந்தையில் சிறப்பான எண்ணிக்கையை விக்டர் பதிவு செய்துவந்தது. இடைக்காலத்தில் விகட்ர் நிறுத்தப்பட்டிருந்தாலும் தற்பொழுது கடுமையான சவால்கள் நிறைந்த 110சிசி பைக் மார்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Google News

tvs-victor

 

விக்டர் பைக்கில் 3 வால்வுகள் கொண்ட 9.6PS ஆற்றல் மற்றும் 9.4 Nm டார்க் வெளிப்படுத்தும் 109.7 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.   விகட்ர மைலேஜ் லிட்டருக்கு 76 கிமீ தரும்.

விக்டர் பைக்கின் முன்புறத்தில் 130 பிரேக் டிரம் மற்றும் 240 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. பின்புறத்தில் 110 மிமீ டிரம் பிரேக் உள்ளது. மேலும் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் 5 விதமான அட்ஜெஸ்ட் கொண்ட ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் உள்ளது.

டிவிஎஸ் விகட்ர் பைக் விலை விபரம்

விகட்ர் டிஸ்க் பிரேக் –  ரூ.51,490

விக்டர் டிரம் பிரேக் – ரூ. 49,490

அனைத்து ம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

மேலும் விபரங்கள் வரும் இணைந்திருங்கள்…