அம்மாடியோவ்…! ரூ. 1.12 கோடி விலையில் டுகாட்டி 1299 சூப்பர்லெக்கரா

0

உலகின் மிக எடை குறைவான மற்றும் சக்தி வாய்ந்த மாடலாக விளங்கும் டுகாட்டி 1299 சூப்பர்லெக்கரா பைக் ரூ.1.12 கோடி விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 215 குதிரைசக்தி வெளிப்படுத்தும் எஞ்சின் இடம்பெற்றுள்ளது.

1299 சூப்பர்லெக்கரா எஞ்சின்

கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியம் அலாய் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மிக இலகுவான  150 கிலோ எடை கொண்ட பனிகேல் 1299 சூப்பர்லெக்காரா பைக்கில் மிகவும் சக்திவாய்ந்த 215 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1285cc சூப்பர்குவாட்ரோ எஞ்சினை பெற்றுள்ளது. மேலும் ரேசிங் கிட் உதவியுடன் 5 ஹெச்பி வரை ஆற்றலை அதிகரித்து 220 ஹெச்பி வரை ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இதன் டார்க் 147 நியூட்டன் மீட்டர் ஆகும்.

Google News

டுகாட்டி 1299 சூப்பர்லெக்காரா பைக்கில் இடம்பெற்றுள்ள நவீன 1299’s six-axis IMU வாயிலாக வேகமான செயல்பாட்டினை சிறப்பாக வழங்கும் வகையில் உதவி புரியும். DTC EVO  (Ducati Traction Control ) எனப்படும் டிராக்ஷன் கன்ட்ரோல் உதவியுடன் IMU ( Inertial Measurement Unit) செயல்பட்டு பைக்கின் சக்கரங்களின் செயல்பாடு மற்றும் எஞ்சின் ஆற்றல் உற்பத்தி போன்றவற்றை கையாளும் வகையில் அமைந்துள்ளது.  இதில் டுகாட்டி ஸ்லைட் கன்ட்ரோல் , பவர் லேன்ச்,  எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் என பல நவீன வசதிகளை பெற்ற மோட்டார்சைக்கிள் மாடலாகும்.

500 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள டுகாட்டி 1299 சூப்பர்லெக்காரா விலை இந்தியாவில் ரூ.1.12,20,000 (1.12 கோடி) (எக்ஸ்-ஷோரூம் டெல்லி ) ஆகும். இந்தியாவில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்படும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.