தமிழகம் & புதுச்சேரி கேடிஎம் விலை குறைப்பு பட்டியல் – ஜிஎஸ்டி

0

சூப்பர் பைக் பிரியர்களுக்கு விருப்பமான மாடலாக விளங்கும் கேடிஎம் டியூக் 200 , டியூக் 250 மற்றும் ஆர்சி 200 பைக்குகளின் விலை தமிழ்நாட்டில் குறைக்கப்பட்டு புதுச்சேரியில் மட்டுமே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

new ktm duke 200

Google News

கேடிஎம் டியூக் விலை – ஜிஎஸ்டி

ஜிஎஸ்டிக்கு பிறகு கேடிஎம் டியூக் 200, டியூக் 250 மற்றும் ஆர்சி 200 பைக்குகள் விலை தமிழகத்தில் ரூ. 3,677 முதல் ரூ.4,449 வரை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டியூக் 250சிசி பைக்  ரூ.4,449 வரை தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது.

ktm 250 duke

கேடிஎம் டியூக் 200, டியூக் 250 மற்றும் ஆர்சி 200 விலை விபரம் பின் வருமாறு ;-

டியூக் 200 – ரூ. 1,46,303

டியூக் 200 – ரூ. 1,75,923

ஆர்சி 200 – ரூ. 1,75,027

டியூக் 390 – ரூ. 229,682

ஆர்சி 390 – ரூ. 2,34,503

(தமிழ் நாடு எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல்)

2017 ktm duke 200 launch

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் புதுச்சேரியில் ரூ. 2593 வரை முந்தைய பைக் விலையை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. டியூக் 390 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் ரூ. 8686 வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டியூக் 200 – ரூ. 1,45,971

டியூக் 200 – ரூ. 1,74,694

ஆர்சி 200 – ரூ. 1,75,590

டியூக் 390 – ரூ. 229,342

ஆர்சி 390 – ரூ. 2,34,163

(புதுச்சேரி எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியல்)

KTM 390 DUKE

நாட்டில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் கேடிஎம் டியூக் 250 பைக் ரூ. 8667 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. மிக குறைந்தபட்சமாக மிசோராம் மற்றும் அருனாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறைக்கப்பட்டுள்ளது. 350சிசி க்கு கூடுதலான மாடல்கள் மட்டுமே விலை உயர்த்தப்பட உள்ளதால் டியூக் மற்றும் ஆர்சி 390 பைக்குகள் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது..

நாடு முழுமைக்கான விலை பட்டியல் படத்தை கீழே காணலாம்.

ktm Duke 200 duke 250 rc200 latest gst prices

ktm Duke 390 RC390 Price list post gst