வரவிருக்கும் புதிய பைக்குகள் 2017

வருகின்ற 2017 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள புதிய பைக்குகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலான புதிய சூப்பர் பைக்குகள் இந்திய சந்தையை ஆக்கிரமிக்க உள்ளது.

1. யமஹா FZ250

வருகின்ற ஜனவரி 24 ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள யமஹா நிறுவனத்தின் புதிய 250சிசி பைக் மாடல் மிக நேர்த்தியான தோற்ற அமைப்ப்புடன் இதில் பொருத்தப்பட்டிருக்கும் 250சிசி என்ஜின் 20 குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகை – ஜனவரி 24 , 2017

விலை விபரம் – ரூ.1.40 லட்சம்

Yamaha fzs v2.0 new color

2. பெனெல்லி 302ஆர்

மிக வேகமாக பிரிமியம் சந்தையில் வளர்ந்து வரும் டிஎஸ்கே-பெனெல்லி நிறுவனத்தின் BN 302R பைக் 38 ஹார்ஸ்பவர் , 27 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் லிக்யூடு-கூல்டு 300சிசி பேரலல் ட்வீன் என்ஜின் பொருத்தப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் வழியாக சக்கரங்களுக்கு ஆற்றல் செல்கின்றது. ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு  வந்த 302 ஆர்பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதனால் அடுத்த மாதம் வரவுள்ளது.

வருகை – ஜனவரி 2017

விலை – ரூ.3.50 லட்சம்

Benelli Tornado 302

3. 2017 கேடிஎம் டியூக் 390

சமீபத்தில் வெளிவந்த புதிய 2017 கேடிஎம் டியூக் 390 பைக் வருகின்ற ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்கப்படுகின்றது. கூடுதல் வசதிகள் இருபிரிவுகளை கொண்ட எல்இடி ஹெட்லைட் , கேடிஎம் மை ரைட்  என பல மாற்றங்களை பெற்றுள்ளது. புதிய டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளஸ்ட்டர் டிஸ்பிளே வசதி போன்றவற்றுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகை – ஜனவரி – மாரச் 2017

விலை – ரூ.2.40 லட்சம்

2017 KTM Duke 390 Side

 

4. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்

டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள நேக்டூ ஸ்போர்ட்டிவ் ரக மாடலாக விளங்கும் ஜி310 ஆர் பைக்கில் 33.6 குதிரைதிறன் வெளிப்படுத்தும் 313சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையில் வடிவமைக்கப்படுகின்ற மாடல் என்பதனால் மிகுந்த சவாலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகை – ஜனவரி – மாரச் 2017

விலை – ரூ.2.20 லட்சம்

 

5. டிவிஎஸ் அப்பாச்சி 300

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த டிவிஎஸ் அகுலா 310 பைக் ஆனது அப்பாச்சி 300 என அழைக்கப்படலாம் என கருதப்படுகின்ற நிலையில் ஜி310 ஆர் பைக்கின் ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக அகுலா 310 விளங்கும். ஜி310 ஆர்பைக்கில் இடம்பெற்றுள்ள அதே 33.6 ஹெச்பி வெளிப்படுத்தும் 313சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

வருகை – அக்டோபர் 2017

விலை – ரூ.2.30 லட்சம்

TVS Akula 310 concept

6. பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ்

ஜி310 ஆர் பைக்கின் அட்வென்ச்சர் ரக மாடலாக வரவுள்ள ஜி310 ஜிஎஸ் பைக்கில் அதே 33.6 ஹெச்பி வெளிப்படுத்தும் 313சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் குறைந்த சிசி கொண்ட என்ஜினை பெற்று ஜிஎஸ் வரிசை மாடலாக விளங்கும்.

வருகை – இறுதி 2017

விலை – ரூ.2.70 லட்சம்

7. யமஹா எம்டி-03

2016 ஆம் ஆண்டிலே எதிர்பார்க்கப்பட்ட யமஹா MT-03 பைக் மாடலானது யமஹா ஆர்3 பைக்கின் நேக்டு ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் மாடலாகும். இதில் 41.4பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 321சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாகவே விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகை – அக்டோபர் 2017

விலை – ரூ.3.00 லட்சம்

Yamaha mt 03

8. ட்ரையம்ப் போனிவில் பாபர்

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள ட்ரையம்ப் போனிவில் பாபர் பைக்கில் 76bhp பவரை வெளிப்படுத்தும் 1200சிசி என்ஜின் பொருத்தப்பட்ட பாபர் மாடல் கிளாசிக் டிசைன் அம்சங்களுடன் ரைடிங் மோட் , டிராக்ஷன் கன்ட்ரோல் என பலவற்றை கொண்டதாக விளங்குகின்றது.

வருகை – ஜனவரி -மார்ச் 2017

விலை – ரூ.11.00 லட்சம்

9. ஹீரோ HX250 R

கடந்த 2014 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த ஹீரோ ஹெச்எக்ஸ் 250 ஆர் பைக் பல்வேறு காரணங்களால் விற்பனைக்கு வராமல் உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டின் இறுதியில் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகை – இறுதி 2017

விலை – ரூ.1.50 லட்சம்

hero hx250r front

10. ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் 750 ஜிடி

அதிக சிசி கொண்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடலாக வரவுள்ள கான்டினென்டல் 750 ஜிடி பைக்கில் 750சிசிஎன்ஜின்  47bhp ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். அடுத்த ஆண்டில் வரவுள்ள 750சிசி என்ஃபீல்டு மாடல் சர்வதேச அளவிலும் விற்பனைக்கு செல்ல உள்ளது.

வருகை – மே 2017

விலை – ரூ.3.20 லட்சம்

 

மேலும் பல புதிய பைக்குகள் 2017 வருகை குறித்தான தகவல்களை அடுத்த பகிர்வில் அறிந்து கொள்வோம்.