புதிய ஹீரோ அச்சீவர் 150 பைக் விற்பனைக்கு வந்தது

உலகின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் புதிய ஹீரோ அச்சீவர் 150 பைக் ரூ.61,800 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ அச்சீவர் 150 பைக்கில் ஐ3எஸ் (i3S Technology – Idle Start-Stop System) நுட்பத்தினை பெற்றுள்ளது.

hero-achiver-150-launched

ஹீரோ மோட்டோகார்ப் 70 மில்லியன் இருசக்கர வாகனங்கள் விற்பனையை கொண்டாடும் வகையிலும் 70வது இந்திய சுதந்திர தினத்தை சேர்த்து சிறப்பு அச்சீவர் எடிசன் மாடலை வெள்ளை நிறத்தில் இந்திய தேசிய கொடியை கலந்த பதித்து வெளியிட்டுள்ளது. மொத்தம் 70 அலகுகள் மட்டுமே சிறப்பு எடிசனில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் , டூயட் மற்றும் ஸ்பிளென்டர் ஸ்மார்ட் போன்ற மாடல்களை தொடர்ந்து ஹீரோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உருவாக்கப்பட்டுள்ள வடிவ தாத்பரியங்கள் மற்றும் இன்ஜினை பெற்ற மாடலாக புதிய அச்சீவர் 150 பைக்கில்  13.4 bhp பவரை வெளிப்படுத்தும் 150சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.8Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.

புதிய ஹீரோ அச்சீவர் 150 முக்கிய வசதிகள்

  • ஐ3எஸ் நுட்பம்
  • ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதி
  • பக்கவாட்டு ஸ்டேன்டு இன்டிகேட்டர்
  • பராமரிப்பு இல்லாத பேட்டரி
  • விஸ்கஸ் காற்று பில்டர்கள்
  • ட்யூப்லஸ் டயர்கள்

hero-achiver-150-special-edition

புதிய ஹீரோ அச்சீவர் 150 பைக் விலை

  • அச்சீவர் 150 ரூ. 61,800 (Drum Brakes Variant)
  • அச்சீவர் 150 ரூ. 62,800 (Disc Brakes Variant)

(டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

ஹோண்டா சிபி யூனிகார்ன் , பஜாஜ் வி15 , பல்சர் 150 , போன்ற பைக்குளுக்கு மிகுந்த நெருக்கடியை புதிய அச்சீவர் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹீரோ ஸ்பிளென்டர் சூப்பர் மற்றும் பேஸன் ப்ரோ ஐ3எஸ் மாடல்களும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Recommended For You