புதிய ஹீரோ பேஸன் புரோ பைக் விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய பேஸன் புரோ பைக்கினை ரூ.49,250 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ பேஸன் புரோ பாடி ஸ்டைலில் மாற்றம் மற்றும் கூடுதலாக இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.

ஹீரோ பேஸன் புரோ பைக்
நாட்டின் மிக அதிகமாக விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள பேஸன் புரோ பைக் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
புதிய பேஸன் புரோ பைக்கில் கருப்பு நிறத்தில் புகைப்போக்கி , கருப்பு நிற கிளாடிங் பக்கவாட்டு பேனல்கள் , பாடி கிராஃபிக்ஸ் ,  இன்டிக்கேட்டர் , முன்புற மட்கார்டு , போன்றவை புதுப்பிக்ககப்பட்டுள்ளது. மேலும் புதிய ப்ளஸ் வகை பெட்ரோல் டேங்க் சேர்க்கப்பட்டுள்ளது.
8.24பிஎச்பி ஆற்றலை தரும் 97.2சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 8.05என்எம். 4 வேக கியர்பாக்சினை கொண்டுள்ளது.
ஹீரோ பேஸன் புரோ பைக்கில் மொத்தம் 8 வண்ணங்களில் கிடைக்கின்றது அவை கருப்பு ஸ்போர்ட்ஸ் சிகப்பு , பிளாக் ஹைவி கிரே , பிளாக் ஃபுரோஸ்ட் ரெட் , ஸ்போர்ட்ஸ் ரெட் , ஃபோர்ஸ் சில்வர் , புரோன்ஸ் மஞ்சள் மேலும் இரண்டு புதிய வண்ணங்கள் மேட் புராவுன் மற்றும் மெஜிஸ்டிக் வெள்ளை ஆகும்.
ஹீரோ பேஸன் புரோ பைக் விலை ரூ.49,250 (ex-showroom Chennai)
 2015 Hero Passion Pro gets new style and two new colours