புதிய ஹீரோ ஹங்க் பைக்கின் விலை விபரம்

0

புதிய ஹீரோ ஹங்க் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை விபரங்கள் வெளிவந்துள்ளது. அதிகார்வப்பூர்வமாக புதிய ஹீரோ ஹங்க் இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய ஹங்க் பைக்கில் தோற்றத்தில் சில மாற்றங்கள் மற்றும் என்ஜின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

hero-hunk

Google News

முந்தைய மாடலின் ஸ்டைலிங் தோற்றத்தில் இருந்து மாறுபட்ட முகப்பு விளக்கு , புதிய இன்ஸ்டூருமென்ட் கன்சோலில் சைட் ஸ்டேன்ட் இன்டிகேட்டர் , பெட்ரோல் டேங் ஏர் வென்ட் ஸ்கூப் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஹீரோ ஹங்க் முந்தைய என்ஜினை விட ஆற்றல் அதிகரிக்கப்பட்டு அதாவது 15.6 பிஹெச்பி ஆற்றலை (முன்பு 14 பிஹெச்பி ) வழங்கும் 149சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 13.50 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

hero-hunk-side

150சிசி அதிக பவர் கொண்ட மாடலாக விளங்குகின்றது என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. மேலும் ஹங்க் பைக்கில் போல்ட் பிரவுன் , பேந்தர் பிளாக் , மேட் பிளாக் , இபோனி கிரே , ஃபோர்ஸ் சில்வர் மற்றும் ரெட் என 6 வண்ணங்களில் கிடைக்கும்.

ஹீரோ ஹங்க் டீலர்களிடம் வந்த சேர்ந்து விட்டதால் இன்று அல்லது நாளை விற்பனைக்கு வரலாம். தனது இணையத்தில் விலை விபரங்களை வெளியிட்டுள்ளது. ஹீரோ ஹங்க் போட்டியாளர்கள் சிபி யூனிகார்ன் 160 , யமஹா FZ-16 , பஜாஜ் பல்சர் 150 டீடிஎஸ் ஐ , டிவிஎஸ் அப்பாச்சி 160 ஆர்டிஆர் மற்றும் சுசூகி ஜிஎக்ஸ் 150ஆர்

புதிய ஹீரோ ஹங்க் பைக் விலை

செல்ப் ஸ்டார்ட் டபுள் டிஸ்க் பிரேக் ரூ.74,120

செல்ப் ஸ்டார்ட் டபுள் டிஸ்க் பிரேக் ரூ.70,965

{ அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை }