இந்தியாவின் முதல் மின்சார பைக் டார்க் டி6எக்ஸ் விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவின் முதல் மின்சார பைக் மாடலாக புனேவை சேர்ந்த டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் (Tork Motorcycles) நிறுவனம் டார்க் டி6எக்ஸ் மாடலை ரூ.1.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கலாம் என டார்க் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் பைக்குகளுக்கு மிக சிறப்பான மாற்றாக அமைந்து வரும் மின்சாரத்தில் இயங்கும் பைக்குளில் இந்தியாவின் முதல்மாடலாக அமைந்துள்ள டார்க் டி6எக்ஸ் மின்சார பைக் மிக சிறப்பான ஸ்டைலிங் தாத்பரியங்களுடன் நேர்த்தியாக அமைந்துள்ளது.

Google News

டார்க் T6X பைக் மாடலில் இடம்பெற்றுள்ள 6 KW (8bhp) பவரை வெளிப்படுத்தக்கூடிய மின்சார மோட்டார் வாயிலாக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் டி6எக்ஸ் பைக் 200சிசி பெட்ரோல் பைக்கிற்கு இணையானதாக விளங்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் டார்க் 27 Nm ஆகும். 60 நிமிடத்தில் 80 சதவீதம் பேட்டரி சார்ஜ் ஏறும்வகையில் வேகமான சார்ஜிங் முறையை பெற்றுள்ளது. T6X பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆகும். 130 கிலோகிராம் எடை கொண்டதாகும்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்று விளங்குகின்றது. மேலும் 4.3 இன்ச் டிஎஃப்டி தொடுதிரை இன்ஸ்டூர்மென்ட் கிளஸ்ட்டர் , ஆப் தொடர்பு, கிளவூட் சேமிப்பு என பல வசதிகளை பெற்றுள்ளது. எதிர்காலத்தில் ஏபிஎஸ்ஆப்ஷனலாக பெற உள்ளது. இதன் பேட்டரியின் ஆயுட்காலம் 80,000 முதல் 1,00,000 கிமீ ஆகும். T6X பைக்கில் இடம்பெற்றுள்ள  TIROS (Tork Intuitive Response Operating System) அமைப்பு ஆற்றலை மிக சிறப்பான முறையில் பராமரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் இதன் வாயிலாக இருவிதமான டிரைவிங் மோடினை அதாவது ஸ்போர்ட்டிவ் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டினையும் வெளிப்படுத்தும்.

தற்பொழுது டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு டார்க் நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெலிவரிகள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் வருடத்தில் 10,000 பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.  மேலும் நாடு முழுவதும் முதற்கட்டமாக 100க்கு மேற்பட்ட சார்ஜிங் மையங்களை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்பொழுது 6 சார்ஜ் மையங்கள் புனேவில் அமைந்துள்ளது. முதற்கட்டமாக டெல்லி ,பெங்களூரு மற்றும் புனே என மூன்று நகரங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

டி6எக்ஸ் விலை

டார்க் டி6எக்ஸ் மின்சார பைக் அறிமுக விலை ரூ.1,24,999  (எக்ஸ்ஷோரூம்)