யமஹா சல்யூட்டோ பைக்கில் புதிய வண்ணம் அறிமுகம்

பண்டிகை காலத்தை ஒட்டி யமஹா சல்யூட்டோ 125 பைக்கில் புதிய மேட் க்ரீன் வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணத்தை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லாமல் சல்யூட்டோ டிஸ்க் மற்றும் டிரம் என இரு வேரியண்டிலும் கிடைக்கும்.

yamaha-saluto-125-matt-green-color

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த மேட் க்ரீன் தற்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சல்யூட்டோ வரிசை பைக்கில் சல்யூட்டோ 125 மற்றும் சல்யூட்டோ ஆர்எக்ஸ் 110 பைக் மாடல்கள் விற்பனையில் உள்ளது.

8.1 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 125சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதன் டார்க் 10.1 என்எம் ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. சிறப்பான மைலேஜ் தரவல்ல பூளூ கோர் நுட்பத்தினை பெற்றுள்ளது. யமஹா சல்யூட்டோ 125 பைக்கின் தரச்சான்றிதழ் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 78கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட் க்ரீன் வண்ணத்தை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லாமல் கிடைக்க உள்ள சல்யூட்டோ பைக்கில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும் , பின்பக்கத்தில் ஸ்விங் ஆர்ம் சாக் அப்சார்பரும் இடம்பிடித்துள்ளது.  முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்துல் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது.

யமஹா சல்யூட்டோ பைக் விலை

Yamaha Saluto Matt Green Drum Brake – ₹ 53,600

Yamaha Saluto Matt Green Disc Brake – ₹ 56,100

Recommended For You

About the Author: Rayadurai