யமஹா சிக்னஸ் ஆல்ஃபா டிஸ்க் பிரேக் விற்பனைக்கு அறிமுகம்

யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய யமஹா சிக்னஸ் ஆல்ஃபா டிஸ்க் பிரேக் வேரியண்ட் மாடலை ரூ. 52,556 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிக்னஸ் ஆல்ஃபா ஸ்கூட்டரில் இரு புதிய வண்ணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

Yamaha-cygnus-Alpha-disc-brake

ஆல்ஃபா ஸ்கூட்டரின் முந்தைய டிரம் வேரியண்ட் மாடல்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இரட்டை வண்ண கலவையில் வெளியாகியுள்ள சிக்னஸ் ஆல்ஃபா ஸ்கூட்டரில் ரேடியன்ட் சியன் மற்றும் மார்வெல் பிளாக் ஆகிய வண்ணங்களை பெற்றுள்ளது.

7.1 PS ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 113சிசி என்ஜினை பெற்றுள்ளது . இதன் இழுவைதிறன் 8.1Nm ஆகும். இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள யமஹா நிறுவனத்தின் புளூகோர் என்ஜின் எரிபொருள் சிக்கன அமைப்பினை பெற்றுள்ள யமஹா சிக்னஸ் ஆல்ஃபா மைலேஜ் லிட்டருக்கு 66 கிமீ ஆகும்.

21 லிட்டர் கொள்ளளவு வசதி கொண்டுள்ள ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் சைட் சாக் அப்சார்பரினை கொண்டுள்ளது.  அனைத்து டீலர்களிடமும் உடனடியாக சிக்னஸ் ஆல்ஃபா ஸ்கூட்டரை பெறலாம்.

யமஹா சிக்னஸ் ஆல்ஃபா விலை ரூ.52,556 (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Yamaha-Alpha-disc-brake