யமஹா SZ-RR பைக்கின் புதிய வண்ணங்கள் அறிமுகம்

யமஹா SZ-RR V2.0 பைக்கில் புதிய வண்ணங்கள் மற்றும் விலை  ரூ.600 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் யமஹா FZ-S கார்புரேட்டர் மாடல் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் FZ-S FI மற்றும் ஃபேஸர் போன்ற மாடல் விலை மாற்றம் பெற்றுள்ளது.

matt-green

யமஹா R15 பைக்கின் புதிய வண்ணங்கள் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆர்15 வெர்ஷன் 2.0 பைக்கின் விலை ரூ.4000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

யமஹா SZ-RR மேட் பச்சை வண்ணத்தில் புதிதாக பெற்றுள்ளது. வெள்ளை , சிவப்பு , கீரின் ஏரோ போன்ற முந்தைய வண்ணங்கள் தொடர்கின்றது. மேலும் FZ-S FI பைக்கிலும் மேட் பச்சை வண்ணத்தினை பெற்றுள்ளது.

12.1 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 149cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.8 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. என்ஜின் ஆற்றல் விபரங்களில் மாற்றம் இல்லை. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மேட் பச்சை வண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

யமஹா SZ-RR பைக் விலை விபரம்

மேட் கீரின் – ரூ.67,664

மற்ற வண்ணங்கள் – ரூ.66,664

( அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை )