Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ ஐஸ்மார்ட் பைக்குகளின் அதிரடி ஆரம்பம்

by MR.Durai
7 September 2016, 5:10 am
in Bike News
0
ShareTweetSend

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ ஐஸ்மார்ட் நுட்பம் என அழைக்கப்படும் i3S டெக்னாலஜியை பெற்ற புதிய ஹீரோ அச்சீவர் 150 , பேஸன் ப்ரோ மற்றும் சூப்பர் ஸ்பிளென்ட்ர் பைக் மாடல்கள் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

இந்த நிதிஆண்டில் 15 புதிய இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள ஹீரோ நிறுவனத்தின் முதலாவது மாடலாக பண்டிகை காலத்தை ஓட்டி புதிய மேம்படுத்தப்பட்ட ஹீரோ அச்சீவர் 150 பைக் வரவுள்ளது. அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்பிளென்டர் மற்றும் பேஸன் ப்ரோ  பைக்குகளும் ஐ3எஸ் நுட்பத்துடன் வரவுள்ளது.

ஹீரோ ஐ3எஸ் நுட்பம் என்றால் என்ன ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் காப்புரிமை பெற்றுள்ள ஹீரோ i3S (idle stop-start system) என்றால் ஐடில்-ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் என்பது விளக்கமாகும். ஐ3எஸ் நுட்பத்தின் முக்கிய செயல்பாடே எரிபொருள் சிக்கனத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிக்னல்களில் ஐ3எஸ் நுட்பம் எவ்வாறு செயல்படுகின்றது என்றால் நீங்கள் காத்திருக்கும் சமயத்தில் கியரை நியூட்ரல் செய்துவிட்ட 5 விநாடிகளில் தானாகவே எஞ்சின் செயல்பாடு அனைந்து விடும்  போக்குவரத்து சிக்னலில் பச்சை விளக்கு எரிந்த உடன் பைக்கின் கிளட்சை தொட்டாலே தானாகவே எஞ்சின் இயங்க தொடங்கிவிடும்.  ஐ3எஸ் நுட்பத்தினை சுவிட்சபிள் வசதியுடன் கிடைக்கின்றது. எனவே நமக்கு தேவைப்படும் பொழுது ஆன்/ஆஃப் செய்து கொள்ளலாம்.

முதன்முறையாக ஸ்பிளென்டர் 100சிசி மாடலில் வந்த ஐ3எஸ் பைக்கினை தொடர்ந்து ஸ்பிளென்ட் ஐஸ்மார்ட் 110சிசி பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

புதிய ஹீரோ அச்சீவர் 150

புதிய ஹீரோ அச்சீவர் 150 பைக்கில் மேம்படுத்தப்பட்ட வடிவத்துடன் புதிய பாடி ஸ்டிக்கர்கள் போன்றவற்றுடன் ஐ3எஸ் நுட்பத்துடன் 150சிசி பிரிவில் விற்பனை அதிகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட உள்ளது.

பேஸன் ப்ரோ 

ஹீரோ ஐஸ்மார்ட் நுட்பத்துடன் வரவுள்ள ஹீரோ பேஸன் ப்ரோ மாடலில் 100சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 100சிசி சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் மாடல்களில் ஒன்றாக பேசன் ப்ரோ விளங்குகின்றது.

சூப்பர் ஸ்பிளென்டர்

125சிசி சந்தையில் ஹீரோ ஆட்சி கிளாமர் பைக் வாயிலாக வலுபெற்றுள்ளதை தொடரும் நோக்கில் சூப்பர் ஸ்பிளென்டர் 125 பைக்கிலும் ஐ3எஸ் நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹீரோ ஐ3எஸ் நுட்ப ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் இந்திய மட்டுமல்லாமல் கொலம்பியா போன்ற ஏற்றுமதி சந்தையிலும் சிறப்பான மாடலாக விளங்கி வருகின்றது. 150சிசி சந்தையில் சிறப்பான பங்களிப்பினை ஹீரோ அச்சீவர் தர வாய்ப்புகள் உள்ளது. புதிய மாடல்கள் டீலர்களுக்கு வர தொடங்கியுள்ளதால் அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு வரலாம்.

Related Motor News

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

செப்டம்பரில் புதிய ஹீரோ கிளாமர் 125 க்ரூஸ் கண்ட்ரோலுடன் அறிமுகம்

அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பற்றி முக்கிய சிறப்புகள்

ஸ்போர்ட்டிவான ஹீரோ கரீஸ்மா XMR 250 அறிமுகமானது

ஸ்டைலிஷான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R அறிமுகமானது

சக்திவாய்ந்த அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக் வெளியானது..!

Tags: Hero Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Harley-Davidson X440 T

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

tvs Ronin Agonda Edition

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan