ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது.

0
ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் ரூ.48852 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆக்டிவா மூன்றாவது தலைமுறை ஸ்கூட்டரில் வெளிதோற்றத்தில் மட்டும் சில மாற்றங்களை பெற்றுள்ளது.

ஆக்டிவா 3ஜி (மூன்றாவது தலைமுறை ) ஸ்கூட்டரில் புதிய பக்கவாட்டு பேனல்கள், பின்புற விளக்குகள், மற்றும் முப்பரினாம ஹோண்டா இலச்சினை போன்றவை முக்கிய அம்சங்களாகும்.

ஹோண்டா ஆக்டிவா 3ஜி

எச்இடி நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள முந்தைய 109.2 சிசி என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8பிஎச்பி மற்றும் முறுக்கு விசை 8.74என்எம் ஆகும்.

Google News

காம்பி-பிரேக்கிங் அமைப்பினை ஆப்ஷனலாக டாப் வேரியண்டில் பெறலாம். மேலும் டீயூப்லஸ் டயருடன் கிடைக்கும்.

புதிய ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் 5 வண்ணங்களில் கிடைக்கும். அவை சிகப்பு, வெள்ளை, கிரே, கருப்பு, மற்றும் நீளம் ஆகும்.

வாசிக்க; புதிய தோற்றத்தில் ஹோண்டா பைக்குகள்

ஆக்டிவா 3ஜி விலை

ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் விலை ரூ. 48,852 (ex-showroom delhi)